சம்பள உயர்வை நிராகரிப்பீர்: செனட்டுக்கு மசீச தலைவர் கோரிக்கை

luaமசீச  தலைவர்  ஒருவர்,  எம்பிகளுக்கான  சம்பள  உயர்வு சட்டவரைவை  ஏற்க  வேண்டாம்  என  மேலவையைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மசீச  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லுவா  சூன்  ஹான், மேலவைத்  தலைவர்  அபு  ஸஹார்  உஜாங்கு  எழுதிய  கடிதமொன்றில்  நாட்டின்  பொருளாதார  நிலையைக்  கருத்தில்  கொண்டு 2014   நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  சம்பளத் திருத்தச் சட்டவரைவு  நிறைவேற்றப்படுவதைத்  தாமதப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

“இதற்கு(சம்பள உயர்வுக்கு) அரசாங்கம்  பெரிய  ஒதுக்கீடு  செய்ய  வேண்டியிருக்கும்.  அது  நாட்டிலும்  உலகிலும்  பொருளாதார  நிலை  நிச்சமற்றிருக்கும்  வேளையில் பெரும்  சுமையாக  அமையும்.

“தவிர, ஜிஎஸ்டி-யாலும்  பல  பிரச்னைகள்  எழுந்துள்ளன. கச்சா  எண்ணெய்க்குக்  குறைந்த  விலை  கிடைப்பதால்  நாட்டின் வருமானமும்  நிச்சமற்றிருக்கிறது.

“எனவே, நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  சம்பளத்தையும்  அலவன்சுகளையும்  கூட்டுவதற்கு  இது  பொருத்தமான  நேரமல்ல”, என்று லுவா  கூறினார்.