தம்மிடமுள்ள சொகுசு கடிகாரங்கள் எல்லாம் முன்பு நிறுவனத்துறையில் வேலை செய்தபோது வாங்கப்பட்டவை என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“இதை (அரசியல்வாதிகளின் கடிகாரங்களை) ஏன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?”, என்றவர் செர்டாங்கில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது வினவினார்.
“நான் அரசியலுக்கு வருமுன்னர் நிறுவனத் துறையில் இருந்தேன்”, என்று குறிப்பிட்டவர் மேலே எதுவும் சொல்லவில்லை.
அவரும் மற்ற உயர் அரசியல்வாதிகளும் விலைமதிப்புள்ள கடிகாரங்களுடன் பவனி வருகிறார்கள் எனக் குற்றச்செயல் கண்காணிப்புப் பணிக்குழு (மைவாட்ச்)த் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் கூறிக்கொண்டிருப்பதற்கு எதிர்வினையாக ஜாஹிட் இவ்வாறு கூறினார்.
நிழற்படங்களிலிருந்து ஜாஹிட் ரிம293,000 பெறுமதியுள்ள Richard Mille கடிகாரம் ஒன்றையும் ரிம180,000 பெறுமதியுள்ள IWC கடிகாரமொன்றையும் வைத்திருப்பது தெரிய வருவதாக சஞ்சீவன் கூறினார்.
செய்தியாளர் கூட்டத்துக்கு வந்த ஜாஹிட், சட்டைக்கையை இழுத்துவிட்டு கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டார்.
“கேஸியோ கடிகாரத்தை வைத்துக்கூட பெரும் பரபரப்பை உண்டு பண்ணி விடுவார்கள்”, என்று கிண்டலடித்தார்.
டேய் ….டேய் …..அள்ளிவுட்டான்!!!!
திருடன், தான் ஒரு திருடன் என ஒப்புக் கொண்டுள்ளதாக சரித்திரம் கிடையாது!!!!
MACC, தயவு செய்து அமைச்சர் சொன்னதை நம்பி விடுங்கள்!!!! இவன் அம்னோ அமைச்சர். ஆகையால், பொய்யே சொல்ல மாட்டார்.!!!!
நாங்கள் BN தலைவர்கள்..சொல்வதெல்லாம் பொய்..பொய்யை தவிர வேறொன்றும் இல்லை…
நீர் கூருவது உண்மையா பொய்யா என்று உன் முகம் காட்டுகிறது.