மகாதிர் vs பிரதமர் சர்ச்சையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் அன்வார்

anwமுன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைத்தண்டனையை  அனுபவித்துக்  கொண்டிருந்தாலும் சிறையின்  இரும்புக்  கம்பிகளோ  காங்கிரீட்  சுவர்களோ  நாட்டின்  அரசியல்  நடப்புகளை  அவர்  அறிவதற்குத்  தடையாக  இல்லை.

அந்த  வகையில்தான்  இப்போது  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குமிடையில்  நடக்கும்  சர்ச்சையையும்  அன்வார் உன்னிப்பாக  கவனித்து  வருகிறார்.

அண்மையில்  அவரின்  குடும்பத்தார்  அவரைக்  காணச்  சிறைக்கூடத்துக்குச்  சென்றிருந்தபோது  அது  பற்றி  அவர்  அவர்களிடம்  விசாரித்துள்ளார்.

“கடந்த  வெள்ளிக்கிழமை அன்வாரை  அவரின்  தந்தையின்  இறப்புக்குப்  பின்னர்  முதன்முறையாகச் சந்தித்தோம். அவர் திடமாக  இருக்கிறார், தெளிவாக  இருக்கிறார், அடிக்கடி  திருக்குர்ஆனையும்   வாசிக்கிறார்.

“சிலாங்கூர் பற்றி, மக்களைப்  பற்றி,  பொருளாதாரத்தைப்  பற்றி  முன்னாள்  பிரதமருக்கும்  நடப்புப்  பிரதமருக்குமிடையிலான  ஊடல்   பற்றி  நிறைய  வினவினார்”, என்று அவரின்  துணைவியாரும்  பிகேஆர்  தலைவருமான  டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  கெஅடிலான்  நாளேட்டிடம்  தெரிவித்தார்.