கடந்த செப்டம்பரில் யுபிஎஸ்ஆர் தேர்வுக்கு முன்னதாகக் கேள்வித்தாள்களை வெளியாக்கியதாக அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்ட இரு ஆசிரியர்களை சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
அவர்களை விடுவித்த செஷன்ஸ் நீதிபதி ஜக்ஜிட் சிங், அவ்விருவரும் கேள்வித்தாள்களை வெளியாவதற்கு உடந்தை என்பதற்கோ கேள்வித்தாள்களை வசப்படுத்திக்கொள்ள முனைந்தார்கள் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.
“கேள்வித்தாள்களை வெளியாக்கியது யார் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. உண்மைக் குற்றவாளி அடியாளம் காணப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்க முடியும்”, என்று நீதிபதி கூறினார்.
எல்.சுப்பாரா @ கமலநாதன், 35, முருகன் பழனிசாமி, 27, ஆகிய இருவரும் அதிகாரத்துவச் சட்டம் பகுதி(1) (சி)-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அச்சட்டம் ஒராண்டிலிருந்து எழாண்டுவரை சிறைத்தண்டனை வழங்க வகை செய்கிறது.
கருப்பு கடாக்கள் தப்பித்தன!!!! MH 70யை உதாரணமாகச் சொல்லாமல், 1MDB யை நல்ல உதாரணமாக காட்டியிருக்கலாம் !!! பொருத்தமாக அமைந்திருக்கும்!!!!
அப்பாடா! இப்பதான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட முடிகின்றது. மற்றவர்களும் அவ்வாறே விடுவிக்கப் பட்டால் மனம் நிம்மதி அடையும்.
எய்தவன் இருக்க அம்பை நொந்து என்னப்பயன் என்பதுப் போல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விட்டு விட்டு ஆசிரியர்களை தண்டிப்பதில் எந்த நன்மையையும் இல்லை…?