பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்(பொடா) மக்களவையில் விவாதத்துக்கு வந்து நிறைவேற்றப்பட்டபோது தாம் அங்கில்லாமல் போனது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கப் பார்க்கிறார் என்று கூறப்படுவதை மறுத்தார்.
அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்ததை ஒப்புக்கொண்ட அவர் , அங்கு விடுமுறைக்காக சென்றாரா அல்லது அதிகாரப்பூர்வமாக சென்றாரா என்பதைச் சொல்லவில்லை.
“நான் கேள்விகளுக்குப் பயந்து தப்பி ஓடவில்லை. ஏற்கனவே விளக்கி இருக்கிறோம். (இருந்தும்) எல்லாரும் என்னையே குறை சொல்கிறார்கள்”, என்றவர் அங்கலாய்த்துக் கொண்டார்.
“(பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங்மும்தான், பொடாவின்போதும் தேச நிந்தனைச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும் அங்கு இல்லை. அதை ஏன் கேட்பதில்லை?”, என்று லிம் வினவினார்.
“மக்களவைத் தலைவர் நள்ளிரவைத் தாண்டியும் சட்டவரைவுமீதான விவாதத்தை அனுமதிப்பார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை”, என்றாரவர்.
ஏப்ரல் 7-இல், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் நள்ளிரவுக்குப் பின்னரும் பொடா சட்டவரைவுமீதான விவாதம் தொடர அனுமதித்தார்.
முடிவில், 12 மணிநேர விவாதத்துக்குப் பின்னர் பின்னிரவு மணி 2.25க்கு அது- ஆதரவாக 79 வாக்குகளும் எதிர்ப்பாக 60 வாக்குகளும் பெற்று- நிறைவேற்றப்பட்டது.
விவாதம் நடந்தபோது அங்கு இல்லாமல்போன 26 பக்கத்தான் எம்பிகளும் கடுமையான கண்டனத்துக்கு ஆளானார்கள்.
தலைவர் எப்பவும் சுற்றுலாவில்தான் இருப்பாரு போல.
மாண்பு மிகு பினாங்கு முதலமைச்சரே , உங்களிடம் கேட் கப ட்ட கேள்விக்கு சரியான பதிலா கூறுங்கள் , அதை விடுத்து ஹாடி அவாங் கைலிக்குள் மறைந்து கொள்ள முயசிக்க வேண்டாம் .
பொடா நிறைவேற்றப்பட்டபோது ஆஸ்திரேலியாவில் இருந்தேன்,,சரி !
அப்போ வாடா நிறைவேற்றப்பட்டபோது இந்தியாவிலா இருந்தே