பக்கத்தான் ரக்யாட் ஒரு பதிவு பெற்ற கட்சி அல்ல என்பதால் அக்கூட்டணியின் நிலைப்பாட்டை மீறிச் செயல்பட்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்குக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அது பெற்றிருக்கவில்லை என்கிறார் டிஏபி ஏற்பாட்டுச் செயலாளர் அந்தோனி லொக்.
சங்கப் பதிவகத்தில் அதன் பதிவு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அதன் காரணமாக பக்கத்தான் இப்போது உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புவிதிகளைப் பெற்றிருக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
அதனால்தான் கூட்டணியில் பொதுவான நிலைப்பாட்டை மீறி கிளந்தானில் ஹுடுட்டைக் கொண்டுவர தனி உறுப்பினர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஹாடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
சினார் ஹரியான் ஆன்லைனிடம் லொக் இவ்வாறு கூறினார்.