ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் தேசிய முன்னணிக்கும் இடையே செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் மதிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் தொடர்பாக அண்மையில் ‘டிவி-3’க்கு அளித்த நேர்காணலில், “ஆதாரம் என ஏதுமில்லை; இது தொடர்பாக நிழற்படம்கூட் ஒன்றுமில்லை; தவிர, ஆதாரப் பத்திரமோ அல்லது சாட்சியமோ என ஒன்றும் கிடையாது” என்றெல்லாம் அவர் அறுதியிட்டுச் சொன்னார்.
எந்த ஒன்றையும் நிரூபணம் செய்ய மேற்குறிப்பிட்ட ஏதாவதொன்று இருந்தால்தான் அது மெய்யென நம்பப்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு முன் தேசிய முன்னணிக்கும் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், தேசிய முன்னணி(தே.மு.) சார்பில் கையொப்பம் இட்டவர் அதன் தேசியச் செயலாலர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான். கோலாலம்பூரில் இடம்பெற்ற இச்சம்பவத்தை நாடே அறியும். இதற்கு ஆதாரப் பத்திரம், நிழற்படம், சாட்சி என எல்லாமும் இருக்கின்றன. நஜிப் மறுக்க முடியாத உண்மை – அவரது சொந்த வார்த்தைகளால் அனைத்தும் உண்மை.
அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற முன்வரைவின்படி, இந்திய சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்-களுக்கும் ஏழை மக்களுக்கும் 2013-2018-க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் உதவும் பொருட்டு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து முதல் எட்டு மாதங்களுக்கு தே.மு. அரசில் இடம் பெற்றதன்வழி ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தியும் ஒருங்கிணைந்து செயல்பட முனைந்தார். ஹிண்ட்ராஃப் குழுவினரும் முடிந்தவரை பாடுபட்டனர். ஆனாலும் நிர்வாக அடிப்படையில் அதிகாரமோ அல்லது நிதி ஒதுக்கீடோ வழங்கப்படவில்லை. இதனால் பரிதவிப்பு நிலைக்கு ஆளான ஹிண்ட்ராஃப் இயக்கம், அமைச்சரவைக் குழுவிலிருந்து விலக நேர்ந்தது.
‘ஒரு மனிதரை கை குலுக்கி வரவேற்றுவிட்டு பின் அலட்சியம் புரிவதைப் போல’ நஜிப் அரசு செயல்பட்டதால், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வேதமூர்த்தி 2014 பிப்ரவரி மாதத்தில் பதவியைத் துறந்தார். அதற்கடுத்தும் கடந்த 14 மாதங்களில் நஜிப் அரசு ஏதாவது செய்யுமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ‘இலவு காத்த கிளியைப் போல’ ஏமாந்ததுதான் மிச்சம். தே.மு. அரசு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில் எந்தப் பயனும் இல்லை.
இதன் தொடர்பில் தற்பொழுது நஜிப்பிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஹிண்ட்ராஃப்-உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்வழி கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டிருக்கிறோம். சட்டப்படி செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து நஜிப் அலட்சியம் காட்டினால், அடுத்தகட்ட நடவடிக்கையை ஹிண்ட்ராஃப் இயக்கம் முழு வீச்சில் மேற்கொள்ளும்.
இதன் தொடர்பில் நஜிப்பிற்கு இரு வழிகள் உள்ளன. முதல் வழி, சட்டப்படியான இந்த ஒப்பந்தத்தில் அவர் உறுதியளித்தபடி இந்திய சமுதாயத்திற்குரிய கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்; அல்லது ஒப்பந்தத்தை மீறியதற்கும் அலட்சியம் புரிந்ததற்கும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அத்துடன், நஜிப் எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அடுத்த(2016) நிதி ஆண்டில் அவர் நிறைவேற்ற இருக்கும் அம்சங்களைத் தெரிவிக்கும்படியும் கேட்டிருக்கிறோம்.
இதற்கு முன் இருந்த பிரதமர்களைவிட இப்போதைய பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு அதிகமாக செய்வதாக தற்பொழுது சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பதவியில் இருக்கும்பொழுது ஒருவரைப் புகழ்வதற்கென்று ஒரு சிலர் எப்பொழுதும் தயாராக் இருப்பார்கள். ஹிண்ட்ராஃப் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களைப் பற்றி தெரிந்த எவரும் அப்படி சொல்ல மாட்டார். மாறாக, இந்திய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டும் நலிந்த நிலையிலும் இருக்கும் தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய சமூக-பொருளாதாரக் கடப்பாடுகள் நஜிப்பிற்கு நிறைய உள்ளன.
பிரதமர் என்ற முறையிலும் நாட்டுத் தலைவர் என்ற வகையிலும் நடுநிலையை நிலைநாட்டும் வல்லமையை பிரதமர் நிரூபிக்க வேண்டும் என்றும் ஹிண்ட்ராஃப்- உடனான ஒப்பந்தத்தை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கெஞ்சியதும் பிச்சைக் கேட்டதும் போதும் இனியாவது உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். தடிக்கேட்கப் பழகுவோம். நமக்கும் ஓட்டுரிமை இருக்கிறது, நாமும் இந்த நாட்டுக்கு உழைத்திருக்கிறோம், இந்த நாட்டு வளங்களை அனுபவிக்க நமக்கும் உரிமையும் அந்தஸ்தும் இருக்கிறது. இழந்தவரி போதும் இனி இருப்பதையும் இழக்காதிருக்கு உடனடி நடவடிக்கை தேவை. இப்படியே விட்டுவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலின் போது ‘வாங்க, பேசலாம்’ அன்று அழைப்பார்கள். பின்னர் நாமக்கட்டிதான். இதையே தான் அந்த ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கையெழுத்தான போதும் பலரும் சொன்னார்கள். சொன்னா எங்கைய்யா காட்கறாய்ங்க…கேட்டா எங்கைய்யா தர்றாய்ங்க…இந்திய சமுதாயமே விழித்திடு…
உண்மைதான், ஹின்றாபுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை வைத்து வழக்கு தொடர முடியுமா எனப்பாருங்கள். என்னால் முடிந்த வழக்கு பணமாக ரி. 1000 தருகிறேன்.
தேர்தல் காலங்களில் அரிசிக்கும் பருப்புக்கும், ரி.100க்கும் கோயிலில் வெட்டப்படும் ஆட்டுக்கும் விலை போகும் இனமாக இருக்கும் நாம் மாற வேண்டும், இல்லையேல் மாற்றப்படுவோம் என்பதை உணரவேண்டும். தேர்தல் காலங்களில் பாடி பாடி சொன்னாலும் நமது மக்களுக்கு அன்பளிப்புக்கள் கண்ணை மறைக்குதே .
நம்மவர்கள் பாரிசானுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்த வேண்டும். 57 ஆண்டு கள் நம்மை பிச்சைக்காரர்களாக்கியதுதான் மிச்சம். கடந்த தேர்தல் இவங்களுக்கு ஒரு படிப்பினையாக இருந்திருக்க வேண்டும்.
முதலில் இந்த ஹிண்ட்ராஃப் பை ஒலித்து கட்டுங்கள் ,இந்த 5 பஒற்றுமை இல்லை ,பண அலஞ்சானுங்க ,இன்றைக்கு அட்சி மாறியதும் இவர்கள் தான் காரணம் ,GST உருவானுதும் இவர்கள் தான் காரணம் ,,தமிழர்கள் எங்கே போனாலும் உருப்பிடாது என்று எடுத்துக்காட்டுக்கு இந்த ஹிந்ரப்
mic காரனும் உணரனும்,! BN சில்லரைகாக சமுதாயத்தை சாகடிகாதிர் !!
ஹிண்ட்ராப் தலைவர்களை (பச்சோந்தி தனேந்திரனை தவிர்த்து) மற்ற தலைவர்களை குறை சொல்வதை தவிர்த்து, நம்பிக்கை துரோகம் செய்த கட்சிக்கு நல்லதொரு பாடம் புகுத்த, மக்கள் ஹின்டிராபுக்கு ஆதரவு கரம் கொடுப்பதே சிறப்பாகும்…எல்லோரையும் ஏமாற்றலாம், ஆனால், எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற இயலாது!!!!
இந்த வேதாவுக்கும் , கணேசன் பயலுக்கும் தலையிலே அடித்து சொன்னேன் , அந்த நஜிப்புடன் ஐக்கியம் வேண்டாம் என்று , இருவரும் கேட்கவேயில்லை ! இதில் போதாது என்று அரசியல் ஆசை வேறு இந்த ஹிண்ட்ராப்புக்கு ! ஹிண்ட்ராப் மட்டும் இன்று வரை ஒரு NGO வாக இருந்தால் நமது நிலை மாறி இருக்கும், கெடுத்து குட்டி சுருக்கி விட்டார்கள் இந்த ஹிண்ட்ராப் தலைவர்கள் , இன்னும் என்னடா வந்து ஓயாங் காட்டுறிங்க ? அன்று எனது கருத்துக்கு எதிர்பாக எழுதின கேன பயலுங்க எங்கே ?
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானைப் பிளந்து வைகுண்டம் காட்டுவது எப்படி ? கிடைத்த வாய்ப்பை எல்லாம் கோட்டை விட்டுவிட்டு புது கதை அளக்கவேண்டியதுதன்
“நஜிப் மறுக்க முடியாத உண்மை – அவரது சொந்த வார்த்தைகளால் அனைத்தும் உண்மை” – நீங்க சொன்ன மாதிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டியதுதானே?. கையாலாகாத கணேசா வாய்பேச்சு ஏன்?. எங்கிருந்துடா உன்னை புடுச்சானுங்க ஹின்றாபுக்கு ஆலோசகராக வைக்க. நல்ல ஆலோசர். நல்ல ஓநாய்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க மஇகா காரனை விரட்டியடியுங்கள் போதும். அரிசி பருப்புக்கும் ஆட்டுக்கறிக்கும் வாக்களிக்கும் தமிழனை முதலில் உதையுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க மஇகா காரனை செருப்பால அடித்து விரட்டியடியுங்கள்
மக்கள் கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவை கண்டு பயந்த தேசிய முன்ணனி தான் இண்டாரப்புடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள முடிவெடுத்தது என்பதை பலர் உணராமல் உளரிக்கொண்டிருக்கிறார்கள், நம் ஆதரவு இல்லாமல் தே,மு, (2008) தோல்வியை எதிர்கொள்ளும் என்று உணர்ந்து வார்த்தையளவில் இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துக்கொண்டது. ஆனல் தேர்தல் காலங்களில் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நாம் எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை இருந்தால் மட்டுமே இண்டராப் தே,மு.க்கு ஆதரவு நல்கும் என்ற நிலையில் ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது. எல்லா உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களிலும் இத்தகவல் வெளியானது, உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்ட எல்லா தகவல்களும் இருக்கும்போது, தற்பொழுது, எந்தவிதமான ஆதாரமும் இல்லை என நம்பிக்கை நாயகன் நாஜீப் அறிக்கை விடுகிறார். இந்தியர்கள் குறிப்பாக இண்டராப் பொருத்த வரை இவரை ஆதரிப்பவர்களுக்கும் “தூக்கி”களுக்கும் மட்டுமே இவர் பிரதமர். கொன்றால் பாவம் தின்றால் தீரும்.
கணேசா உங்க மேதாவித் தனத்தை பாரிசானில் இருண்த பொது பார்த்தோம் . லண்டன் வLAக்கிலும் துரோகியாகி விடாதிர்கள்