சிலுவையை அகற்ற பிஜே தேவாலயம் ஒப்புக்கொண்டது

Crossremovedபெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் புதிதாக கட்டப்பட்ட தேவாலயம் இன்று அதிர்ச்சிக்கு உள்ளாயிற்று. அதன் வாசல் முன் கூடிய எதிர்ப்பாளர்கள் தேவாலயம் அதன் சிலுவையை அகற்ற வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

த ஸ்டார் ஓன்லைன் பதிவின்படி, சுமார் 50 குடியிருப்பாளர்கள் அத்தேவாலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு வெளியில் கூடி அத்தேவாலயத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் சிலுவையை அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்கள் பல பதாதைகளை ஏந்தி நின்றனர். அவற்றில் ஒன்று: “முஸ்லிம்களிடையே சினத்தை உண்டுபண்ணாதீர்”, தாமான் மேடானில் முஸ்லிம்களுக்கு சவால் விடாதீர்” மற்றும் தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்ற வாசகங்களைக் கொண்டிருந்தது.

“95 விழுக்காடு முஸ்லிம்கள் வசிக்கும் இந்த இடத்தில் எந்தத் தரப்பினரும் சிலுவையை வைக்கக் கூடாது”, என்று ஓர் ஆர்ப்பாட்டக்காரர் கூவினார்.

முகமூடி அணிந்திருந்த இன்னொரு இளைஞர், “அதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் இல்லையேல் நாங்கள் செய்வோம்”, என்று கத்தினார்.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மற்றும் கிராமத்தின் தலைவரான அப்துல்லா அபு பாக்கர் அந்த தேவாலயம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இடத்தில் இருக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

“அவர்களுக்கு தேவாலயத்தை நடத்தும் அதிகாரம் இருந்தால், நாங்கள் எப்படி அதனைத் தடுக்க முடியும். ஆனால், எங்களுடைய ஈடுபாடெல்லாம் இது ஒரு மலாய்க்காரர் பகுதி. இது அப்படி இருக்கக்கூடாது”, என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

தேவாலாம் அந்த சிலுவையை “இன்று அல்லது நாளை” அகற்ற ஒப்புக் கொண்டது என்று அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.

த ஸ்டார் ஓன்லைன் செய்தியின்படி, 30 நிமிடங்களுக்குப் பின்னர் போலீசார் அங்கு வந்தனர். தேவாலயத்தை சேர்ந்த 15 பேர் தனித்து இருக்க விரும்பினர்.

சமயச் சுதந்திரத்தை தற்காப்பேன் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கிறிஸ்தவர்களுக்கு உறுதியளித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.