பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சரமாரியாக தாக்குதல் தொடுத்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் இப்போது முதல்முறையாக பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி தம் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
“அவருடைய (நஜிப்) தனிப்பட்ட வாழ்க்கையில் பல விசயங்கள் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.
“அவற்றை, அவரதும் அவரின் துணைவியாரதும் ஆடம்பர வாழ்க்கைமுறை போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்றுதான் நினைத்தேன்”, என்று மகாதிர் அவரது மிக அண்மைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரோஸ்மா, பெரும் செலவாளி என்றும் ஆடம்பரப் பொருள்களில் மிகவும் நாட்டமுள்ளவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இவ்விவகாரம் நியு யோர் டைம்ஸிலும் ஒரு செய்தியாக வெளிவந்திருக்கிறது.
ஆனால், 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரத்துக்குப் பின்னரும் நஜிப்பின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது என மகாதிர் கூறினார்.
“பில்லியன் கணக்கான ரிங்கிட் எங்கு போனது என்பதை அவரால் விளக்க முடியாமலிருப்பதையும் 1மலேசியா நிர்வாகத்தில் கேள்விக்குரியவர்களை நியமனம் செய்ததையும் பார்த்தபோது அவர் நாட்டின் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம்தான் தோன்றியது”, என்றாரவர்.
நஜிப் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழந்தது எப்படி என்பதை அடுத்த பதிவில் விளக்குவதாக முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.
இந்நாட்டின் முதல் பெண்மணி எப்படி செலவு பண்ணா யாருக்கென்ன. அது அவர் காலமாக உண்டியலில் சேர்த்து வைத்த பணம் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?.
இப்போது ஊளை இடுகிற இவர், ஐந்து வருடமாக வாயில் என்ன வைத்திருந்தாராம் ? இவர் முன்னால் செய்து வைத்த ஓட்டைகள், இப்பொழுது பெரிய சுரங்கங்களாக மாறிவிட்டது, வெள்ளத்திற்கு முன் அணைக்கட்டுபவன் அறிவாளி,
சுனாமி அலைகள் சீறி பாய்ந்துகொண்டிருக்கும் வேளையில் சுவர் எழுப்புவது…….