ஆயர்: சிலுவையை அகற்றியது ஒரு துடுக்கான செயல்

bishopகத்தோலிக்க  ஆயர்  டாக்டர்  பால்  டான்  சீ இங், பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் ஓர்  ஆலயத்தின்முன்  கூடிய  ஆர்ப்பாட்டக்கார்கள்  அதன் சுவரிலிருந்த  சிலுவையை  கட்டாயப்படுத்தி  அகற்றிய  செயலைக்  கடுமையாகக் கண்டித்துள்ளார்.

ஆலயத்தின்முன்  கூடிய  ஆர்ப்பாட்டக்காரர்கள், அப்பகுதியில்  இந்தியர்கள்  அதிக  எண்ணிக்கையில்  இருந்தபோதும்  அது  மலாய்க்காரர்கள்/முஸ்லிம்கள்  அதிகம்  வாழும்  பகுதி  என்று  கூறிக்  கொண்டார்கள்.

“இச்சம்பவம் இந்நாட்டில்  கிறிஸ்துவர்களை அச்சுறுத்தும்  போக்கு  துடுக்குத்தனத்தின்  உச்சத்தை  எட்டியிருப்பதைக்  குறிக்கிறது”, என  மலாக்கா-ஜோகூர்  மறைமாவட்ட  கத்தோலிக்க  தேவாலயத் தலைவரான  டாக்டர் பால்  கூறினார்.

“கிறிஸ்துவர்களை   மிரட்டுவது  செல்வாக்கை இழந்துவிட்டு  அதைத்  திரும்பப் பெற  முயலும்  அரசியல்வாதிகளின் பொழுதுபோக்காக  மாறியுள்ளது”, என்றாரவர்.