ஷாபி: பிரதமர் விவரமாக விளக்கமளிக்க வேண்டும்

shafஅம்னோ உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாபி  அப்டால், டாக்டர்  மகாதிர்  முகம்மட் எழுப்பிய  விவகாரங்களுக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  விவரமாக  விளக்கமளிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

மற்றவர்களைவிட  கட்சியும்  அரசாங்கமும்  அதற்கு  விளக்கமளிப்பது  மேல்  என்றாரவர்.

“அவர் பல  கேள்விக்ளை  முன்வைத்துள்ளார். அவற்றுக்கு  விவரமாக  விளக்கமளிப்பது  அவசியம்.

“அது முக்கியமாகும். ஏனென்றால் அந்த  விளக்கமளிப்பு  மகாதிருக்கு  மட்டுமல்லாமல்  மக்களுக்கும்  நம்பிக்கையை  உண்டாக்கும்.

“தலைமைக்  கணக்காய்வாளருக்காகவும் பொதுக்  கணக்குக்  குழுவுக்காகவும்  காத்திருக்கும்  வேளையில்  தகவல்களை  வைத்திருப்பவர்கள், நிதி அமைச்சு  போன்றவை, தெள்ளத்  தெளிவாக  விளக்கமளிப்பது  முக்கியமாகும்”, என்று  ஷாபியை மேற்கோள்காட்டி  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.