மந்திரி புசார்: சிலுவை கிறிஸ்துவர்களின் புனித சின்னம்

crossகிறிஸ்துவர்கள்  புனிதமாக போற்றும்  சிலுவையை  அகற்றக்கூடாது  என்கிறார் சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி.

“சிலுவை  கிறிஸ்துவர்களுக்கு  ஒரு  புனிதமான  சின்னம்.

“அச்சின்னத்தை  அகற்றுமாறு கட்டாயப்படுத்துவது  ஏற்புடையதல்ல. அது  கிறிஸ்துவ  சமூகத்தை  அவமதிப்பதாகும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நேற்று, பெட்டாலிங் ஜெயா,  தாமான்  மூடாவில்  ஒரு  தேவாலயத்துக்குமுன்  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  தேவாலயச்  சுவரிலிருந்த  சிலுவை  அகற்றப்பட  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுக்கப்பட்டது  பற்றி  அஸ்மின்  இவ்வாறு  கருத்துரைத்தார்.