சிலுவையை எடுத்த இடத்திலேயே வைக்க எம்பி உதவ வேண்டும்

gerakசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, நேற்று  பெட்டாலிங்  ஜெயா  தேவாலயம்  ஒன்றிலிருந்து  அகற்றப்பட்ட  சிலுவையை  எடுத்த  இடத்திலேயே  திரும்பவும்  வைப்பதற்கு  உதவ  வேண்டும்  என  கெராக்கான்  இளைஞர்  பிரிவு கேட்டுக்  கொண்டிருக்கிறது.

அப்பிரிவின் தலைவர்  டான்  கெங் லியாங், மாநில  அரசு  இவ்விவகாரத்தை  உடனடியாகக்  கவனிக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

“அஸ்மின்  அலி  மேலும்  தாமதிக்காமல்  இவ்விவகாரத்துக்குத்  தீர்வு  காண  வேண்டும். கடந்த  ஆண்டு  பிஎஸ்எம்  கிறிஸ்துவ பைபில்களை  சிலாங்கூர்  அரசுத்  துறையொன்று  பறிமுதல்  செய்த விவகாரத்தைப்  போன்று  இதையும்  இழுத்துக்  கொண்டே போகக்  கூடாது”, என்று  டான்  கூறினார்.