மே முதல் நாள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள #BatalGST பேரணிக்கு சுமார் ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் திரட்ட இலக்குக் கொண்டிருப்பதாக கித்தா லவான் செயலகம் இன்று தெரிவித்தது.
தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் அப்பேரணி ‘Kami Semua Tok Janggut (நாம் எல்லாருமே தோக் ஜங்குட்-கள்தாம்) என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும். வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து பிற்பகல் மணி 2.30க்கு பேரணி தொடங்கும். அதில் கலந்துகொள்வோர் நான்கு இடங்களில்- மஸ்ஜித் நெகாரா, மஸ்ஜித் ஜாமெக், சோகோ, மெனாரா மே பேங்க்- ஒன்று திரண்டு டட்டாரான் மெர்டேகாவையும் கேஎல்சிசி-யையும் நோக்கி ஊர்வலமாகச் செல்வர்.
“மே 1 பேரணியில் கலந்துகொள்ளுமாறு பிகேஆர், பாஸ், டிஏபி ஆகிய கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். நம்முடைய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் கலந்துகொள்ள விரும்பினால் தாராளமாக வரலாம்”, என #BatalGST தலைவர் முகம்மட் சாபு கூறினார்.
மகாதிர் இந்த விசயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் அவரையும் கலந்துக்க சொல்லுங்கள் .