எதிரணியின் சுலோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டார் நஜிப்

sloganபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  மீது  குறைசொல்லும்  படலத்தைத்  தொடரும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், அவர் சீன, இந்தியர்களின்  வாக்குகளைக்  கவர்வதற்காக  எதிரணியினரின்  சுலோகத்தைத்  தத்தெடுத்துக்  கொண்டதாகக்  கூறியுள்ளார்.

சீனர்களுக்குப்  புதிய  பொருளாதாரக்  கொள்கை  பிடிக்கவில்லை  என்பதால்  அவர்கள்  அப்துல்லா அஹமட்  படாவியை  நிராகரித்தார்கள்  என  நஜிப்புக்குத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர்களைக்  கவர்வதற்காகவும்  சீனர், இந்தியர்களுக்கு  ஆதரவாக  இருப்பதாகக்  காட்டிக்கொள்ளவும்  நஜிப்  சமுதாய  சீரமைப்புத்  திட்டத்தைப்  புறக்கணிக்க  வேண்டியதாயிற்று.

“அரசாங்கப்  பல்கலைக்கழகங்களில்  பூமிபுத்ராக்களுக்கான  இடங்களைக்  குறைத்தார்.

“பூமிபுத்ரா  குத்தகையாளர்களுக்கும்  சிறு   வணிகர்களுக்கும் கிடைத்து வந்த  அரசாங்க  சலுகைகள்  நின்று  போயின. பலர்  தொழில்  செய்வதை விட்டு  விட்டார்கள்.

“சுருக்கமாக  சொல்வதானால்,  அவர் ‘மலேசியர்  மலேசியா’  என்ற  எதிரணியின்  சுலோகத்தைத்  தத்தெடுத்துக்  கொண்டார். பெயரை  மட்டும்  மாற்றி ‘1மலேசியா’  என்று  அழைத்தார்”. இவ்வாறு  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  கூறியுள்ளார்.