புவா: ஐஜிபி கருத்துரைப்பதை நிறுத்த வேண்டும்

puaதேவாலயத்துக்கு  எதிரான  ஆர்ப்பாட்டத்தில்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  சகோதரரும்  சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்  அது பற்றிக் கருத்துரைக்கக்  கூடாது  என டிஏபி  எம்பி  டோனி  புவா  கூறினார்.

விசாரணை  என்று  எதுவும்  தொடங்குமுன்னரே  அதில்  விசாரிப்பதற்கு  எதுவுமில்லை  எனக்  கூறியதே  ஐஜிபி-இன்  நடுநிலைப்போக்கையும்  அவரின்  தீர்ப்புரையையும் கேள்விக்குரியதாக்குகிறது  என்றாரவர்.

எனவே, விசாரணைக்கு  துணை ஐஜிபி  நூர்  ரஷிட்  இப்ராகிம்தான்  தலைமை தாங்க  வேண்டும். விசாரணை நடத்தி  முடித்து  விசாரணை  அறிக்கையை  உள்துறை  அமைச்சரிடம்  நேரடியாக  ஒப்படைக்க  வேண்டும்  என புவா  கூறினார்.