முன்னாள் அம்னோ எம்பியான சைபுடின் அப்துல்லா ஆர்ப்பாட்டங்களின் விசயத்தில் போலீஸ் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளார்.
எதிரணி-ஆதரவு கித்தா லவான் பேரணிகளின்போது பல சமூக ஆர்வலர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணைக்காக போலீஸ் கைது செய்திருக்கிறது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை அம்னோ-தொடர்புள்ளவர்கள் தாமான் மூடாவில் ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது மட்டும் அங்கு நடந்ததை அறிந்துகொள்ள போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தம் சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து விசாரித்திருக்கிறார்.
“இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை ஐஜிபி-யால் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க முடிகிறபோது மற்றவர்கள் மட்டும் ஏன் இரவுப்பொழுதை லாக்-அப்பில் கழிக்க வேண்டும்?”, என முன்னாள் தெமர்லோ எம்பியும் முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சருமான சைபுடின் வினவினார்.
இதையே நாங்கள் சொன்னால் இந்நேரம் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ‘உள்ளே’ தள்ளியிருப்பார் ஐ.ஜி.பி.! நல்லவேளை நீங்கள் முன்னாள் துணை அமைச்சர், தப்பித்தீர்கள்!
சட்டம் ஒரு இருட்டறை .
சட்டம் அதன் கடமையை செய்யும் .
வெயிட் அண்ட் சீ.
ஆளும் கட்சியிலும் நீதி நேர்மையுடன் நடந்துகொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.