தேவாலய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஜி-25 கண்டித்தது

g-2525 மலாய்  மேன்மக்களைக் கொண்ட  அமைப்பு (ஜி25), ஒரு  தேவாலயக்  கட்டிடத்திலிருந்து  சிலுவையை  அகற்றக்  கோரி  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களுக்கு  எதிராகக்  கடும்  நடவடிக்கை  எடுக்குமாறு  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு  எதிராக  உறுதியான  நடவடிக்கை  எடுக்கத்  தவறினால்,  அது  சமுதாயத்தில்  உள்ள  சமயத்  தீவிரவாதிகளுக்கு  ஊக்கமளிப்பதாக  அமைவதுடன்  மற்ற  சமயத்தவரின்  உரிமைகளைக்  காலில்  போட்டு  மிதிக்கலாம்  எவரும்  கேள்வி  கேட்க  மாட்டார்கள் என்றும்  அவர்கள்  நம்பத்  தொடங்கி  விடுவார்கள்.

“அதுவே, மலேசியாவில்  இப்போது இன  இணக்கமும்  சமய  சுதந்திரமும்  கடைப்பிடிக்கப்படுவதில்லை  என்பதற்குச்  சான்றாதாரமாகவும்  அமைந்து  விடும்”, என  ஜி25 ஒர்  அறிக்கையில்  தெரிவித்தது.

“கேளிக்கை  நிகழ்ச்சிகள்  தொடர்பில்  கேள்விக்குரிய  வழிகாட்டும் விதிகளை  ஜாகிம்  வெளியிட்டுள்ள வேளையில்  இந்த  அவப்பேறான  சம்பவமும்  நிகழ்ந்திருப்பது  நாட்டின்  பொருளாதாரத்தில்  கடுமையான  தாக்கத்தை  உண்டுபண்ணலாம். அது  அச்சத்தைக்  கொடுத்து வெளிநாட்டு  முதலீட்டாளர்களையும்  சுற்றுப்பயணிகளையும்   விரட்டி  அடித்து விடலாம்”, என்று  அது  எச்சரித்தது.