தொழுகை இடமாக செயல்பட தேவாலயத்திடம் அனுமதி இல்லை

permitஞாயிற்றுக்கிழமை  ஆர்ப்பாட்டத்துக்கு  இலக்கான  தேவாலயம் அது  வழிபாட்டு  இல்லமாக  செயல்பட  அனுமதி  பெற்றிருக்கவில்லையாம்.  கடைவீட்டைத்  தொழுகை இடமாக மாற்ற  அனுமதி  கேட்டு  அது  இதுவரை  விண்ணப்பம்  செய்யவில்லையாம்.

ஒரு  கடைவீட்டை  வழிபாட்டு இல்லமாக  மாற்ற  நினைத்தால் அதற்கு  அரசாங்கத்தின்  ஒப்புதலைப்  பெற வேண்டும்  என பிஜே மாநகராண்மைக் கழக(எம்பிபிஜே) பொது உறவு  அதிகாரி  சைனுன் ஜக்கரியா  கூறினார்.

“அவர்கள்  அதற்கு  மனு  செய்யவில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.