13 மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று யுனிவர்சிடி மலாயாவின் வேந்தர் துங்கு மணடபத்துக்குமுன் திரண்டு மே முதல் நாள் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் #BatalGST பேரணிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர்.
பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல்- தொடர்புள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது என்ற போதிலும் அவர்கள் இன்று ஒன்று திரண்டனர். சட்டவிரோத கூட்டங்களில் அல்லது பேரணிகளில் கலந்துகொள்ளக் காணப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படும் அபாயமும் இருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்களின் பேச்சாளர் நஸ்ருல் ஹக்கிம், பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)-யால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“ஜிஎஸ்டி வந்த பின்னர் நடைமுறைச் செலவுகள் உயர்ந்திருப்பதால் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் கூடியுள்ளது. நூல்களுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால், மற்ற சேவைகளுக்கு, ஒளிநகல் எடுத்தல் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி உண்டு.
“இது மாணவர்களுக்குக் குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சுமையாக உள்ளது”, என்றாரவர்.


























இன்னும் அதிகமான மாணவர்கள் இளைஞர் அணிகள் அரசு சார இயக்கங்கள் என்று எல்லோரும் கிளம்புங்கப்பா. இந்த GST -யை நினைத்தாலே உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் GST கட்ட வேண்டும். எந்த காலத்தில் இந்த மாதிரி அட்டூழியம் இந்த நாட்டில் நடந்தது. நம்பிக்கை நாயகனும் அவனைச் சார்ந்த அரசாங்கமும் இத்தோடு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டும்.