சிலுவை விவகாரம்: பிரதமர் எச்சரிக்கை

crosspmticksoffதாமான் மேடான் தேவாலயத்தில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பிதமர் நஜிப் கண்டித்ததோடு போலீஸ் அந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யும் என்று கூறினார்.

சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறினர் என்று கருதப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு ஆளாவார்கள் என்று அவர் கூறினார்.

“தேசநிந்தனைச் சட்டம் இனங்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதோடு அனைத்து சமயங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்காகும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மக்கள் சட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதோடு மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளவாறு அனைத்து சமயங்களையும் அவற்றின் நடைமுறைகளையும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மேலும் கூறினார்.