மகாதிர் ‘நடப்பு விவகாரங்கள்’ பற்றிப் பேசுவார்

forumவரும்  சனிக்கிழமை,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் ஹுலு  கிளாங், தாமான் மெலாவாத்தியில்  பொது  அரங்கு  ஒன்றில்  பேசுவார்.

காலை  மணி  9.30க்குத்  தொடங்கும்  அந்நிகழ்வில் மகாதிர் “நடப்பு  விவகாரங்கள்” பற்றிப்  பேசுவார்  என்று  கூறப்படுகிறது. நடப்பு  விவகாரங்கள்  என்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  மேலும்  தாக்குதல்களைத்  தொடுக்கப்  போகிறார்  என்றுதான்  அர்த்தமாகும்.

இது, இனி  வரப்போகும்  விளக்கக்  கூட்டங்களுக்கு  ஒரு  முன்னோட்டமாக அமையப்போகிறதா  என்பது   தெரியவில்லை. அப்துல்லா  அஹ்மட்  படாவிமீது  தாக்குதல்  நடத்தியபோதும்  மகாதிர்  இப்படித்தான்  செய்தார்.

சில  என்ஜிஓ-கள்  கூட்டமைப்பான  பிரிஹாடின்   ஏற்பாடு  செய்துள்ள இவ்வரங்குக்கு ‘Bicara Negarawan (அரசியல்  மேதையின்  உரை)  எனத்  தலைப்பிடப்பட்டுள்ளது.

அதில் மகாதிர்  எதைப்  பற்றிப்  பேசுவார்  என்பது  ஏற்பாட்டுக்குழுவுக்கே  தெரியவில்லை.

“அது  அவரின் விருப்பத்தைப்  பொறுத்தது”. என  ஏற்பாட்டுக்  குழுவின்  பேச்சாளர்  ஒருவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.