தாமான் மேடானில் சிலுவை- எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அப்துல்லா அபு பக்கார், பெட்டாலிங் ஜெயா போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் உடன்பிறப்பான அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தாமான் லிண்டோங்கான் ஜெயா அம்னோ கிளைத் தலைவரான அப்துல்லா, இன்று மாலை போலீஸ் தலைமையகம் செல்லப்போவதாக தெரிவித்தார். அவர் வழக்குரைஞரை உடன் அழைத்துச் செல்ல மாட்டார்.
“வழக்குரைஞர் எதற்கு, இது ஒரு சின்ன விவகாரம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“போலீசார் இன்று காலை என்னை அழைத்து போலீஸ் நிலையம் வருமாறு கூறினர். வேறு யாரையெல்லாம் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரியாது”, என்றவர் சொன்னார்.
இன்னொரு கண் துடைப்பு நாடகம் அரங்கேறுகிறது MIC UMNO MCA புல்திகள் வேணுமானால் நம்புவணுங்க ஆனால் மக்கள் அல்ல
கண்கட்டி வித்தை.
ஒரு நாசி லெமா , ஒரு teh tarik , விசாரணை முடிந்ததது !
ஏப்ரல் 22 தேவாலய விவகாரம்: ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!….. நான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.,,,அடிச்சாண்டா பல்டி மன்னிப்போம் இருந்தா தலையில் ஏறி உக்காந்திடுவான்.
தம்பி தலையாக இருக்கும் பொழுது அண்ணனுக்கு இது சின்ன விஷயம் …