கடந்த மாதம் கிளானா ஜெயா சுங்கத் துறை தலைமையகத்தில் பொருள், சேவை வரிக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது கைதான சமூக ஆர்வலர்களில் 54பேர் அமைதிப் பேரணிச் சட்டத்தை மீறியதற்காக நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே 25 பேர் -அவர்களில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மார்ச் 26-இல் குற்றம் சாட்டப்பட்டனர்.
உள்ளிருப்புப் போராட்டத்த்துக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஜாரிங்கான் ரக்யாட் தெர்திண்டாஸ் (ஜெர்ஜிட்), குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருவருக்கும் ரிம3,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறது. ஆக அக்குழுவினர் மொத்தத்துக்கும் ரிம162,000 பிணை கட்ட வேண்டியிருக்கும்.
அவர்களில் சிலர் ரிம 3,000 பிணைப்பணம் கட்ட முடியாதவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு உதவி செய்யுமாறு அந்த என்ஜிஓ முகநூலில் கேட்டுக் கொண்டிருக்கிறது.


























பேரணி அமைதியாக நடந்ததால் ,,, இவர்கள் உம்னோ சட்டத்தை மீறி உள்ளார்கள் ….