பாடாங் புசார் மருத்துவமனை திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவு அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிய மக்களுக்குக் கிடைத்த மற்றுமொரு ஏமாற்றமாகும் என பெர்லிஸ் பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் ஷாருன் ரட்ஸி கூறினார்.
2011-இல் அறிவிக்கப்பட்ட அத்திட்டத்தைப் பணப்பற்றாக்குறையால் தள்ளிவைப்பதென பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு முடிவு செய்துள்ளது.
“கூட்டரசு அரசாங்கம் பிரதமருக்கு ஆடம்பர ஜெட் விமானம் வாங்குவதற்கு ஆசை ஆசையாய் ரிம450 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிடுகிறது. ஆனால், பாடாங் புசார் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக 40-நிமிடம் பயணம் செய்து கங்காரில் உள்ள துவாங்கு பவுஸியா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
“அரசாங்கம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது?”, என்றவர் ஓர் அறிக்கையில் வினவினார்.
மருத்துவமனை போன்ற முக்கியமான திட்டத்தைத் தாமதப்படுத்துவது ‘மக்களுக்கு முன்னுரிமை’ என்ற சுலோகம் வெறும் அலங்காரச் சொல்தான் என்பதைக் காண்பிக்கிறது என்றவர் சாடினார்.
“மக்களாவது மண்ணங்கட்டியாவது ……….
நான் பதவியில் இருக்கும் வரையில் நன்றாக அனுபவிப்பேன் ……
உங்கள் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது ..நேரமுமில்லை ………