ஊழியர் சேமநிதி வாரிய(இபிஎப்) உறுப்பினர்கள் 55வது வயதில் அவர்களின் சேமிப்பை மீட்டுக்கொள்ள முடியும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உததரவாதம் அளிக்கிறார்.
“இபிஎப் உறுப்பினர்கள் 55 வயதில் பணத்தை மீட்டுக்கொள்ளும் உரிமை தக்க வைத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்”, என நஜிப் இன்வெஸ்ட் மலேசியா 2015 நிகழ்வில் அறிவித்தார். அந்த அறிவிப்பைப் பலத்த கைதட்டலுடன் கூட்டத்தினர் வரவேற்றனர்.
முன்னதாக, நஜிப் இபிஎப்-பிலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ளும் கொள்கைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கவலை கொண்டிருப்பதை அறிந்திருப்பதாக கூறினார்.
அதன் தொடர்பில் பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையத் தளத்தில் 50,000 மலேசியர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.
“இந்த அரசாங்கம் மக்களின் கருத்துகளை எப்போதுமே காது கொடுத்துக் கேட்கிறது. இபிஎப் உறுப்பினர்களில் பெரும்பாலோர் 60-வயதில் ஓய்வுக்கால சேமிப்பு தேவை என்பதை உணரும் வேளையில் 55-வயதில் ஓய்வுக்கால சேமிப்புப் பணத்தை மீட்டுக்கொள்ளும் உரிமையும் வேண்டும் என விரும்புவது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர்.
இபிஎப் பணத்தை முழுமையாக மீட்டுக்கொள்ளும் வயதை 55-இலிருந்து 60ஆக உயர்த்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக இபிஎப் அறிவித்ததை அடுத்து நஜிப் இவ்வாறு அறிவித்துள்ளார்.
எழுத்து மூலம் இல்லா எதையுமே நம்ப முடியாது. அரசியல் சட்டத்தையே மதிக்காத நாதாரிகளின் வார்த்தையை எப்படி நம்ப முடியும்? எழுத்து மூலம் நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுத்தவன் தானே அவன்?
நீ என்னாத சொல்லுறது ,நாங்க உழைத்த பணத்தை நாங்களே எடுத்துக்குவோம் ,,,போடா
அரசாங்க பணத்தையெல்லாம் மாவிடித்து விட்டார்கள் அம்நோக்காரர்கள். அடுத்து EPF கஜானாவில் கை வைக்க பார்கிறார்கள். அதனால்தான் இந்த திட்டம்.
இவன் வாயில் வருதவல்லாம் புளுத்ஹா பெப் பொய் இவனை நம்பாதீர்கள் உங்கள் பணம் shopping பண்ணி habis பண்ணிட்டான்
உங்கள் பொய் நம்பிக்கை இதுவும் ஒன்று என்பது அணைத்து மலேசியா மக்களுக்கும் தெரியும். உறுதி பத்திரம் வெளியிடுங்கள், பிறகு நம்புகிறோம்.
தேச நிந்தனை வாக்குறுதிபோல் இந்த சேமநிதி விவகாரத்திலும் பல்டி அடிக்கமாட்டாய் என்று என்ன உத்தரவாதம் நம்பிக்கை நாயகனே????