குளுவாங்கில் இன்றிரவு டிஏபி பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஒரு கருத்தரங்கம் “இனவாதமிக்கது” என்பதால் அம்னோ இளைஞர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வர்.
பொருள் சேவை வரி மற்றும் இன அரசியல் மீதான அக்கருத்தரங்கில் செனாய், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட டிஏபி-இன் நான்கு பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
“டிஏபி இன அடிப்படையில் வாதம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என குளுவாங் அம்னோ இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
“ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள். ஆனால், இனவாதத்துடன் தொடர்புப் படுத்தாதீர்கள்”. மலேசியாகினி தொடர்புகொண்டபோது ஜோகூர் அம்னோ இளைஞர் தலைவர் கைருல் அன்வார் ரஹ்மாட் இவ்வாறு கூறினார்.
“அரசியல் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக இன உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடாது, அது நல்லிணக்கத்தைக் கெடுக்கும்”, என்றாரவர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கைருல் அன்வாரும் அங்கிருப்பார். அவர் ஆர்ப்பாட்டம் கட்டுமீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்வார்.
உண்மைதான்! நம் நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. பூமிபுத்ரா-புக்கான் பூமிபுத்ரா என்கிற பிரித்தாளும் இனவாத வார்த்தையை முதலில் ஒழிக்கவேண்டும். நாம் அனைவரும் மலேசியர்கள்தானே!
singam இது என்றுமே நடக்காது. பூமி புத்ராக்கள் என்று சொல்லி இவங்களை மூளை சலவை செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது– இது ரத்தத்தில் ஊறிப்போய் விட்டது –இனி என்றுமே ஒன்றும் செய்ய முடியாது. இது தான் அப்பட்ட உண்மை–
“அரசியல் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக இன உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடாது, அது நல்லிணக்கத்தைக் கெடுக்கும்”.
அட, கருத்து கந்தசாமி சொல்லறது பாரு. விவேக் கூட தோற்றுப் போய் விடுவார் இவர்கள் செய்யும் காமெடியைப் பார்த்து.
en thaai thamizh அவர்களே! எனக்கு நிறைய மலாய் நண்பர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள், விஷயமறிந்தவர்கள். இந்த பூமி- புக்கான் பூமி என்கிற சொல்லை அவர்களும் விரும்புவதில்லை. ஏனெனில் இந்த சொல்தான் மலாய்க்காரர்களை சோம்பேறிகளாகவும், விஷயதானம் அற்றவர்களாகவும் சித்தரிக்கிறது என்கின்றனர். எதிர்காலத்தில் இவர்களை போன்றோர் நம்மிடையே நிரம்பிவிடுவர் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. அமைச்சர் ஒருவர் , தான் முதலில் மலைக்காரர், பின்னர்தான் மலேசியர் என்று கூறியிருந்தார். அந்த ஒரு சொல்லே அவரை கீழ்த்தரமாக எண்ணத் தோன்றிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். உலகம் போற போக்கில் ஒரு காலத்தில் இனவாதம் அழியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அம்னோவுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு பலவகைகளில் பணம் வருகிறது… எங்களுக்கு ?? அதனால்தான் இப்படி நடக்கிறது….
பூமியும் புத்ராவும் தமிழர்களுக்கு சொந்தாமான வார்த்தைகள் ,,,எப்படி அது இவர்களுக்கு சொந்தமாச்சு ???????