கடந்த ஞாயிற்றுக்கிழமை எந்த தாமான் மேடான் தேவாலயத்தில் சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்ததோ அந்தத் தேவாலயம் போலீஸ் பாதுகாப்பை நாடுகிறது.
தேவாலயம் செய்த போலீஸ் புகாரில் அதன் ஆயர், தம் பாதுகாப்பு குறித்தும் தேவாலயம் வரும் கூட்டத்தினரின் பாதுகாப்பு குறித்தும் அஞ்சுவதாகக் கூறினார். குறிப்பாக, ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவர் ஆத்திரத்துடன் நடந்து கொண்டது ஆயருக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.
“போலீஸ் நடமாட்டம் தேவை எனக் கேட்டுக்கொள்கிறேன்….எனக்கோ என் உறுப்பினர்களுக்கோ விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடலாம் என்ற அச்சம்தான் காரணம்”, என ஆயர் அப்புகாரில் கூறியிருந்தார்.
நம் நாட்டில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு தெரிந்தால், கேவலம்.
ஆர்ப்பாட்டம் செய்கிறவர்கள் கருப்புத்துணியைக் கொண்டு முகத்தை மூடினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இது ஒருவகையான பயமுறுத்தல். தங்களை ஒரு பயங்கரவாதிகளைப் போல அடையாளம் காட்டுகின்றனர். இந்த வேத்துவேட்டுக்களுக்குக் பின்னால் ஒளிந்து கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்.