மலேசியத் தூதர் ஸஹ்ரேய்ன் முகம்மட் ஹஷிம், டெம்போ சஞ்சிகையின் ஆசிரியர்களைச் சந்தித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பின்னணி பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பார்.
இந்தோனேசியாவில் பிரபலமாக விளங்கும் நடப்பு விவகாரங்களை விவரிக்கும் சஞ்சிகையான டெம்போ. நஜிப் மற்றும் அவரின் துணைவியாரது ஆடம்பர வாழ்க்கை பற்றிக் கட்டுரை வெளியிட்டிருந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
“டெம்போ, வெளிநாட்டு ஊடகங்கள் உள்பட பல மூலங்களிலிருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அக்கட்டுரையை எழுதியுள்ளதைக் காண்கிறேன்.
“அதனால் அவர்களுக்கு நம் பிரதமரின் பின்னணி உள்பட, அவரைப் பற்றிய உண்மை நிலவரங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்”, என ஸஹ்ரேய்ன் நேற்று பண்டுங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என ஹரியான் மெட்ரோ அறிவித்துள்ளது.
ஸஹ்ரேய்ன் இந்தோனேசிய செய்தியாளர் சங்கத்தையும் சந்திப்பார்.
டெம்போவில் வந்ததைப் போன்ற கட்டுரைகள் மீண்டும் வராமலிருப்பதற்காக அவர்களுக்கு உண்மைகளைச் சொல்லி விளக்கப்போவதாக அவர் சொன்னார்.
டெம்போ பத்திரிக்கை காரனுங்க உண்மை பேசவில்லை?. பொய்யை 57 வருடமா நம்பி, நம்பி இந்நாட்டில் ஒரு கூட்டம் அதுதான் உண்மை என்று நம்பிகிட்டு உலாவுவது. இவங்க டெம்போ பத்திரிகை செய்தியை எல்லாம் நம்ப மாட்டாங்க. ஆனா நாங்க நம்பிட்டோம்.