தாமான் மேடான் தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அரசாங்கம் சமயங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சாபா தேவாலயங்கள் மன்றம் (எஸ்சிசி) கேட்டுக்கொண்டிருக்கிறது.
“அது தவிர (தண்டிப்பதைவிட) மலேசியரிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் பொறுப்பான, தார்மீக கடமையும் அரசாங்கத்துக்கு உண்டு.
“இதுபோன்ற சம்பவங்கள் அறியாமையால் விளைபவை, அறியாமையே வெறுப்பை வளர்க்கிறது”, என எஸ்சிசி தலைவர் ஜெர்ரி டஸ்டிங் கூறினார்.
நேரத்திற்கேற்ற நல்ல நயமான பேச்சு!. அப்படியே உங்க பக்கம் கீழ் மட்டத்திலேயும் நடக்குதான்னு பாருங்க!.
இனவாதமும் மதவாதமுமே ஒரு நாட்டை முன்னேறவிடாமல் தடுப்பவை. அதில் நமது நாடும் ஒன்று.
இந்த ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எங்கையா இருக்கு அறிவு ??ம….. தின்னி பயல்க
இஸ்லாம் அல்லாதவர்கள், முஸ்லிம் பள்ளிவாசலில் இதுபோன்று அசம்பாவிதம் ஏற்படுத்தியிருந்தால்,இந்த பதிலை எதிர்பார்த்திருக்க முடியுமா ?
முதிந்த ஆலோசனை… அனைவரும் கடைபிடித்தால் நல்லது..
ஆமாம். கிறிஸ்தவர்களுக்கு இது உணர்ச்சிப்பூர்வமான காரியமே கிடையாது. நாங்கள் அவர்களை மன்னித்து விடுகிறோம். தண்டனைக்குப் பதில் அவர்களுக்கு புத்திமதி புகட்டலே தேவை.
ஐயா ! ஜெர்ரி டஸ்டிங் , அம்னோ BN பொழப்பே இப்படி இனவெறி மதவெறி தூண்டி விட்டுதானே அவர்களின் பொழப்பை நடத்துகிறார்கள் ! நல் இணக்கமா ? அம்னோ BN செய்யும்மா ? நஹி நஹீ ,
இது இந்த தேங்கா மூடியின் இயலாமைத் தனத்தைக் காட்டுகிறது…
உங்களின் நேர்மையான போதனை மத தீவிரவாத பேர்வழிகளுக்கு புரியாதே…?
புரியாமல் செய்திருந்தால் நல்லறிவு புகுத்தலாம். தெரிந்தே வெளிப்படையாக செய்கிறார்களே!!! உண்மையான சமய போதனை கொண்டோர் இப்படி கீழ்த்தனமாக செயலில் ஈடு படார்!!!!!
எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் ; ஆனால் குறைந்த எண்ணிக்கையில் .இந்த குறைந்த எண்ணிக்கையை மேலும் கூடாமல் இருக்க நமது பங்கு என்ன ??? கையில் எடுக்க வேண்டியது கத்தி யா , கனியா ????
ஜெர்ரி டஸ்டிங் உண்மையிலே நாட்டின் நிலவரம் தெரியாமல் பேசுகிறார். இஸ்லாம் இல்லாத மற்ற இனத்தவர்கள் மஸ்ஜித் அல்லது சூராவ் முன் ஆர்ப்பாட்டம் செய்தால் இந்த அரசாங்கமும் போலிசும் சும்மா இருந்திருக்குமா இன்நேரம் எல்லோரையும் உள்ளே தள்ளி இருப்பார்களே. ஜெர்ரி டஸ்டிங் ஒரு கிணத்து தவளை என்றுதான் சொல்லவேண்டும்.
கண்டிப்பாக நடவடிக்கை தேவை ,,,,,,,,,,,,அப்பொழுதான் மீண்டும் இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாது