அம்னோ- ஆதரவு இணையத் தளமொன்று அம்னோ இளைஞர் தலைவர்கள் பிரதமர் நஜிப்பைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சதிக்கூட்டத்தில் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்ட இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா அபு ஹனிபா அக்குற்றச்சாட்டை மறுத்தார்.
நேற்றிரவு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அம்னோ இளைஞர் துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன், ஜோகூர் அம்னோ இளைஞர் தொகுதித் தலைவர்களை நஜிப்புக்கு எதிராக திருப்ப முயன்றார் என MYKMU.net கூறியது.
கடந்த வாரம் நஜிப் அம்னோ இளைஞர் தலைவர்களைச் சந்தித்தபோது கொடுத்த விளக்கம் நம்பும்படியாக இல்லை என்று கைருல் அக்கூட்டத்தில் தெரிவித்ததாக அந்த இணையத் தளம் கூறிற்று.
நஜிப்புக்கு எதிரான புரட்சிக்குத் தலைமையேற்க அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினே மிகவும் பொருத்தமானர் என்றும் கைருல் கூறினாராம்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் கைருலோ, கைரியோ இதுவரை கருத்துரைக்கவில்லை.
கோவிந்தா!, கோவிந்தா!.
இவன் இப்ப வெளியாக மாட்டான் ,இன்னும் என்ன என்ன இருக்கோ அதனையும் இவனும் இவன் பொண்டாடியும் கொள்ளை அடித்து விட்டு இறுதில் மிஞ்சிய கோவணத்தை கூட கொள்ளை அடித்து மலேசியாவை பாலைவனமாக ஆக்கிட்டுதான் வேளியாவன் இவன் .