காலஞ்சென்ற தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி ஏ.செந்தமிழ்ச்செல்வி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் எதிராக பதிவுசெய்திருந்த ரிம1.9 மில்லியன் வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
செந்தமிழ்ச்செல்வியின் வழக்குரைஞர் அமெரிக் சிது பதிவுசெய்த முறையீட்டு மனு குறைபாடுடையது என மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏக மனதாய் தீர்ப்பளித்தது.
நஜிப்பின் தம்பிமார் ஜொகாரி, நஸிம் ஆகிய இருவரும் மூத்த வழக்குரைஞர் சிசில் எப்ராஹம், அவரின் மகன் சுனில் எப்ராஹம், வழக்குரைஞர் எம். அருனாம்பலம், சத்திய பிரமாண ஆணையர் சைனல் அபிடின் முஹாயாட் ஆகியோரும் அவர்களுக்கு எதிரான முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருந்த மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அவர்களுக்குச் செலவுத் தொகையாக ஆளுக்கு ரிம5,000 கொடுக்கும்படியும் செந்தமிழ்ச்செல்விக்கு நீதிபதிகள் முகம்மட் சவாவி முகம்மட் சாலே உத்தரவிட்டார்.
ஆனால், கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷனுக்கு எதிராக செந்தமிழ்ச்செல்வி தொடுத்துள்ள வழக்கை, வழக்கைத் தள்ளுபடி செய்ய அந்த வியாபாரி மனுச் செய்யாத காரணத்தால், நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நீதி பரிபாலனம் என்று நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறதோ அன்றுதான் நீதி தேவதை நிலை கொள்வாள்… அதுவரையில் கண்ணைக் கட்டிக்கொண்டு கற்பழிப்பே மேலோங்கும்!!!!
Hakim2 & mahkamah pun mcm sarkas,dh jd cerita hindustan.SEMUANYA PERASUAH.
எல்லாம் தெரிந்த விஷயம் தான்
சாதாரண மக்களில் ஒருவரான செந்தமிழ்ச்செல்வி, இந்நாட்டு பிரதமருக்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்ததே பெரியவெற்றி( உலக அவமானம் தெரியாத
தம்பதியர்)
இன்றைக்கு கொலைகாரர்கள் பக்கம் தான் நாம் இருக்கு ,,ஆண்டவனே வந்தாலும் சாட்சி சொல்ல முடியாது ,,,சாமியாவது மயி…து ,,
அம்னோ குஞ்சுகள் நீதிபதிகளாக இருக்கும் போது வேறு என்ன நடக்கும்?
எல்லாம் தெரிந்தத்துதானே.