பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், சாபா, சரவாக்கைப் பின்பற்றி பல்வேறு சமயத்தவரிடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார்.
“சாபா, சரவாக்கில் நடப்பதை அவர்கள் பின்பற்ற வேண்டும். தேவாலயமும் பள்ளிவாசலும் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன.
“வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தேவாலயம் முஸ்லிம்கள் கார்களை நிறுத்துவதற்காக அதன் கார் நிறுத்துமிடத்தைத் திறந்து விடுகிறது.
“ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் அதன் கார் நிறுத்துமிடத்தைத் தேவாலயம் செல்லும் மக்களுக்காக திறந்து விடும்.
“இதுதான் நமக்கு வேண்டும். அவர்கள் (ஆர்ப்பாட்டக்காரர்கள்) செய்வது நமக்கு வேண்டாம்”. மலேசியாகினி தொடர்புகொண்டபோது தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார்
எங்கே! ஆர்ப்பாட்டாளர்கள் மீது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் வழக்கின்றி ஈராண்டுகள் உள்ளே தள்ளுங்கள் பார்ப்போம்!!! காமடி பீஸ்!!!
அங்கே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அதனால்தான் .சபாமாநிலத்தில் முஸ்லிம்களை அதிகரிபதில் ஓரளவு அம்னோ வெற்றிகண்டுள்ளது . இனி அங்கும் ஆர்பட்டங்கள் நடை பெற வாய்ப்பு உண்டு.
மேற்கு மலேசியாவிலும் நீங்கள் சொல்லுவது போல உள்ளது தான். ஆனால் அங்கு வரிச்சுமைகள் அதிகரிக்கும் போது மக்களை திசைத் திருப்ப அம்னோவுக்குச் சக்தி இல்லை என்பது தான் வித்தியாசம்!
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதைதானே உங்க கதை எல்லாம்…?
ஆட்டத்தின் நாயகனே நீங்கள்தானடா ?