இன்று பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் நியமனம்

 

PPaucampaignபெர்மாத்தாங் பாவ் நாடாலுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று காலை மணி 9.00 லிருந்து 10.00 வரையில் நடைபெறும்.

இன்றிலிருந்து தொடங்கும் தேர்தல் பிரச்சாரம் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பு மே 7 இல் நடைபெறும்.

பாரிசான் நேசனல் சார்பில் அம்னோவின் சுகைமி ஷபுடின், 44, தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிரணியின் வேட்பாளராக பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், 63, போட்டியிடுகிறார்.

ஒரு சுயேட்சை வேட்பாளரும் இத்தேர்தலில் களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.