பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் நால்வர் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி ஜூஸ்னி இஸ்மாயில் அறிவித்தார்.
பிகேஆரின் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹாய்மி சபுடின், பிஆர்எம்-இன் அஸ்மான் ஷா ஒஸ்மான், சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகியோரே அந்நால்வருமாவர்.
வேட்பு மனு தாக்கல் சுமூகமாகவே நடந்தது. மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்குத்தான் சிறிது வருத்தம். கூட்டத்தின் நெரிசலில் சிக்கிய பழனிவேல் கீழே விழுந்து விட்டார். விழுந்ததில் உதடுகளில் அடிபட்டு வீங்கி விட்டன.
“கூட்டத்தில் சிக்கிக்கொண்டபோது தள்ளிவிடப்பட்டேன். ஆனால், நல்லாத்தான் இருக்கிறேன்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போதும் அவரின் உதடுகள் மட்டும் வீக்கத்துடன் காணப்பட்டன.
இதனிடையே எந்தக் கட்சிக்கு எதிராகவும் புகார்கள் இல்லை என பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ஹனாபி கூறினார்.
பி கே ஆர் மேனங் …
டே… பழனி சா……….
இந்தியர்களின் தேர்தல் பொறுப்பு ppp இடம் நஜிப் வழங்கி விட்டார் , mic இப்போது டம்மி பீசு !
நேற்றைய கூட்டத்தில், தநேந்திரனின் கூட்டமும், சம்பந்தனின் கூட்டமும் தான், ம.இ.கா. வினரைவிட அதிக அளவில் இருந்ததை கண்டேன். பழனி தானாக விழவில்லை. அவரை ஒருவர் இடித்துவிட்டார். இடித்துவிட்டு நழுவியவரை, ஒரு ம.இ.கா. பிரமுகர் துரத்தினார். இடித்தவர் பறந்து விட்டார்.
ஒருத்தன் பிடுங்கி பிழைப்பவன் , மற்றவன் நக்கி பிழைப்பவன், பி பி. பி என்றாலே
நாத்தம் அடிக்கும் . இவங்களை நம்பியா மக்கள் ஓட்டு போடுவார்கள்? கவலைபடாதே
சிங்கம் !