அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அப் பிரிவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறது என்பதையும் அதில் அவருக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுவதையும் மறுக்கிறார்.
“நான் ஆண்பிள்ளை. யாரையும் கவிழ்க்க கையாட்கள் எனக்குத் தேவையில்லை”, என்று புக்கிட் மெர்தாஜாமில், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் மையத்தில் கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நான் எதையும் நேரடியாக செய்கிறவன். அப்படி ஒன்றைச் செய்ய விரும்பினால் அதை நானேதான் செய்வேன்”,என்றாரவர்.
அம்னோ தொடர்புடைய இணையத் தளமான MYKMU.net அம்னோ இளைஞர்கள் நஜிப்பைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பதற்கு கைரியின் எதிர்வினை இது.
செய்ததை செய்யவில்லை என்று சொல்பவனே அரசியல்வாதி. பணம் செலவு செய்து தன்னைச் சுற்றி ஆட்களை வைத்துக் கொள்பவனும், அரசியல் நண்பர்களை பிரித்து வைப்பதிலும், பழையவர்களை ‘கழட்டி’ புதியவர்களை இணைத்துக் கொள்வதிலும், ஒவ்வொரு விழா பேனரிலும் தன்னுடைய ‘படத்தை’ தவறாமல் போடுபவனுமே இன்றைய சிறந்த அரசியல்வாதி.