பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடைபெற்றதாக விமர்சித்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் அதை “இந்நூற்றாண்டின் மிகப் பெரிய திருமணம்” என்றும் வருணித்துள்ளார்.
“இந்த ஆண்டுக்கு மட்டுமல்ல இந்த நூற்றாண்டுக்கே மிகப் பெரிய திருமணம் இதுதான்.
“அவர்கள் 300 பேருடன் கஸக்ஸ்தான் சென்றார்களே அதை மைய நீரோட்ட ஊடகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
“அந்த 300 பேர் யார்?”, கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் பேசியபோது முன்னாள் பிரதமர் இவ்வாறு வினவினார்.
இதனுடன் ஒப்பிடும்போது தம் பிள்ளைகளின் திருமணங்கள் மிகச் சாதாரணமானவை என்றாரவர்.
“என் பிள்ளைகளின் திருமணங்கள் இங்கு யாருக்காவது நினைவில் இருக்கிறதா….யாருக்கும் அதைப் பற்றித் தெரியாது.
“நான் கருமி. பலரை அழைக்கவில்லை. செலவு செய்ய என்னிடம் பணமில்லை”, என மகாதிர் கூறினார்.
உங்களிடம் பணமில்லையா?இந்த. நுற்றாண்டின்அருமையானஜோக்.
மக்கள் பணம் ஜி அச்டி வழி வசூல் செய்து கொண்டாட்டம்.மக்கள் திண்ட்டாடம்.
பிரிட்டிஷ் ராணி வீட்டு திருமணத்துக்கு அடுத்து மிக விமரிசையாக, அதிக ஆடம்பரத்துடன், பெரும் பொருள் செலவுடன் நடந்த நாட்டின் ஒரே திருமணம் இதுதான்..
எவன் அப்பன் வீடு சொத்து ???…………………
சொத்தை பிரிப்பதில் இரு திருடர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் இப்படித்தான் மோதிகொள்வார்கள்..
உனக்கு பொறாமை துன் ! நீங்கள் செய்யாததை நஜிப் செய்கிறார் !நஜிப்பின் ஆட்டம் அடங்கித்தானே போகணும் ! அதுவரைக்கும் எனது ஆசிகள் !
அல்தாந்துயாவுக்கு சேர வேண்டிய நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழலில் மிச்சப்படுத்தப்பட்ட பணம் தானே, செலவை பற்றி கவலை வேண்டாம்.