பொதுமக்களுக்குக் கவலை தரும் விவகாரங்களுக்கு பிரதமரும் அவரின் அமைச்சரவையும் தொலைகாட்சி வழி நேரடியாக விளக்கமளிப்பது நல்லது என்கிறார் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷெரிப் முகம்மட் காசிம்.
டிவி 3-இல் ஏப்ரல் 9-இல் ஒளியேறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நேர்காணல் பற்றிக் கருத்துரைத்த ஷெரிப், அப்படிப்பட்ட நேர்காணல்களில் இருவர் நேர்முகம் காண வேண்டும் என்றார். ஒருவர் நேர்காணல் காணப்படுபவருக்கு ஆதரவாகவும் இன்னொருவர் எதிர்ப்பாளராகவும் பேச வேண்டும்.
நேர்காணல் முடிந்ததும் பிரதமர் சொன்னவை மீது குழு விவாதமும் நடத்தலாம்.
“இப்படி நேர்காணலை விறுவிறுப்பாக்கினால் கம்பத்து மக்கள்கூட பாலிவூட் படங்களை ஒதுக்கிவிட்டு அறிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்”, என்றாரவர்.
மேலைநாட்டு ஊடகங்கள் இதைச் செய்கின்றன. மலேசியாவும் அதைப் பின்பற்றலாம் என ஷெரிப் கூறினார்.
ஷெரிப், முன்னாள் அரசு அதிகாரிகளைக் கொண்ட ஜி 25 என்று அழைக்கப்படும் ஒரு குழுவைச் சேர்ந்தவராவார்.
“மக்கள் தேசிய கடன், ரிங்கிட் மதிப்புக் குறைவு, பொருள், சேவை வரி, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை பற்றி சமூக வலைத்தளங்களில் வெறுப்பைப் பரப்புவோரிடமிருந்து தகவல் பெறுவதைவிட அந்தந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களிடமிருந்து விளக்கம் பெறுவதையே விரும்புகிறார்கள்”, என்று ஷெரிப் தமதுரையில் கூறினார்.
என்ஜிஓ ஒன்று அரச சிலாங்கூர் கிளப்பில் அவரது உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நல்லது தான்! ஆனால் இதைத்தானே நாங்கள் தினசரி நமது தொலைக்காட்சிகள் செய்கிறோம் என்று பதில் வருமே!
அரசாங்கத்தில் இல்லாத நேரத்தில் தான் இவர்களின் கிட்னி வேலை செய்யும் !
அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர் முக்கால் வாசிபேர் அவன் கூலிகள் கால்வாசிபேர் நமக்கு ஏன் இந்த வீ ன் வம்பு நாம உண்டு நம்ம வேலை உண்டு இருக்குறாங்க.
யாராச்சும் கேட்டுத்தான் ஆகணும்.அப்பதான் நல்லதொறு தீர்யு கிடைக்கும்.