பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட வேன்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார்.
“ஜிஎஸ்டி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று இன்று கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கில் 500 க்கும் மேரற்பட்டவர்களின் இடியோசை போன்ற கைத்தட்டல் ஆரவாரத்திற்கிடையில் மகாதிர் கூறினார்.
ஜிஎஸ்டி இப்பட்டியே இருக்க வேண்டுமா அல்லது 6 விழுக்காடு வரி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமா அல்லது அகற்றப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மகாதிர் இவ்வாறு பதில் அளித்தார்.
“முன்பு, விற்பணை வரி இருந்தது. அந்த விற்பணை வரியை சற்று கூட்ட வேன்டுமென்றால், அது ஓகே.
“ஆனால், அதிகாரிகளுக்கே புரியாத ஓர் அமைவுமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்”, என்றாரவர்.
சிவில் சமூகத்தினர் மற்றும் எதிரணியினர் இந்த ஜிஎஸ்டி மக்களுக்கு சுமையாக இருக்கும் என்றும் அவ்வரி அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், புரோட்டோன் கார் நிறுவனத்தின் ஆலோசகரான மகாதிர் ஜிஎஸ்டி ஏப்ரல் 1 இல் அமலாக்கப்பட்டதிலிருந்து தேசிய கார்களின் விலை குறைந்துள்ளது என்று கிண்டலாகக் கூறினார்.
அப்படி போடுங்க TUN
துன் நீங்கள் சொல்வது சரிதான் ஜி.எஸ்.டி. வரி அமுலாக்கம் வரும் முன் தொழிலாளர்களின் வருமானமும் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாமல் வரி போட்டது பொருட்களின் விலைவாசியும் ஏறி உகார்ந்துக் கொண்டு குத்தாட்டம் போடுகிறது…?
அகற்றப்பட வேண்டும் DOT
இந்த மாதம் rm 40 அதிகம் செலவு செய்தேன், 31 வெள்ளி gst ,9 வெள்ளி விலையேற்றம் , பொது மக்களுக்கு சுமை இல்லை என்று, மின்னல் fm மில் மீண்டும் மீண்டும் பொய் சொல்லுது நமது அரசு ! ஏப்ரல் 1 முதல் இதுவரை நான் ஒருவன் மட்டும் ஏறக்குறைய 70 வெள்ளி வரை gst செலுத்தி உள்ளேன் ! எல்லா வளமும் உள்ள நமது நாட்டில் gst அவசியம்மா ?
மலேசியா செய்து கொண்ட FTA க்கள் நாட்டு மக்களின் செலவினங்களை குறைக்க அல்லவே செயல் பட்டிருக்க வேண்டும்? மாறாக நீர் போட்ட தில்லலங்கடியால் இன்றுவரை நாங்கள் புரோட்டன் கார்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்! நீர் மட்டும் எதை பெரிதாக கிழித்து விட்டாய்???
மகாதிமிர் அவர்களே! உங்கள் கூற்றுப்படி, GST அகற்றப்பட்டுவிட்டால், அதோடு நஜிப்பிற்கு எதிரான உங்கள் தாக்குதலை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை.
ஒரு மிலோ ஐஸ் விலை rm2.20 + GST 6%rm0.15=rm2.35, GST வரும் முன் அதன் விலை rm1.80 , இப்பொழுது மக்களுக்கு பெரும் சுமை துன் , அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது , 1.4.2015 முதல் விலை வாசிகள் குறையும் என்று சொல்லி விட்டு இப்பொழுது எல்லம் விளையும் எகிறி விட்டது
அப்படி போடுங்கே துன்…. நஜிப் பை அகற்றுவதே நல்லது.
துன்…. நஜிப் பை அகற்றுவதே நல்லது.
நம்புங்கள்.நம்புங்கள் என்று சொல்லி gst மூலம் மக்களுக்கு வெச்சாரு ஆப்பு gst இல்லாமல்58 ஆண்டுகளாக ஊழல் செயிதும் நாடு மேம்படடையா?
உணவு பொருள்கள் மருத்துவச்செலவுகள் ஆகிய இரண்டிற்கும் ஜி எஸ் டி முற்றிலும் அகற்றப்பட வேண்டும்
நம்புங்கள்.நம்புங்கள் என்று சொல்லி gst மூலம் மக்களுக்கு வெச்சாரு ஆப்பு gst இல்லாமல்58 ஆண்டுகளாக ஊழல் செயிதும் நாடு மேம்படடையா?