முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) புரியவில்லை என்று கூறி அவரைச் சிறுமைப்படுத்தியுள்ளதாக நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானைக் கடுமையாக திட்டியிருக்கிறார் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின்.
“டாக்டர் எம்முக்கே ஜிஎஸ்டி புரியவில்லை என்கிறபோது தேசிய பொருளாதாரத்தில் அவரளவுக்கு அனுபவமற்ற மலேசிய மக்கள் மட்டும் ஜிஎஸ்டியைப் புரிந்துகொள்வார்களா?
“பெரும்பான்மை மலேசியர்களால் ‘அறிவில் குறைந்தவராக’க் கருதப்படும் ஒருவர், அறிவுக்கூர்மைக்குப் பெயர்பெற்ற டாக்டர் எம்முக்குப் பொருள், சேவை வரி புரியவில்லை என்று கூறுவாரானால் அவர் தாம் டாக்டர் எம்மைவிட அறிவில் மேம்பாட்டவர் எனக் கூறுகிறாரா?”, என பெர்லிஸ் முப்தி மஸ்லான்மீது வசை பாடினார்.
மகாதிருக்கு அந்த வரி பற்றிப் புரியவில்லை அல்லது அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவருக்கு அதைப் பற்றித் தப்பான தகவல்களைத் தெரிவித்திருக்கலாம் அதுதான் அந்த வரியை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார் என மஸ்லான் அஸ்ட்ரோ அவானியில் கூறியதாக வெளிவந்த செய்தி குறித்து அஸ்ரி இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
மகாதிமிருக்கு GST புரிகிறதோ இல்லையோ, நஜிப் வீட்டுக்கு போனால்தான், முக்ரிஸ் அரியணை ஏற முடியும் என்பதை நான்றாகவே அறிந்து வைத்துள்ளார். அலிபாபாவும் [நஜிப்] நாற்பது திருடர்களும்[அமைச்சர்கள்] GST என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த GST நஜிப் மற்றும் அவர் ஜால்ராக்களுக்கு தான் தெரியும்
பள்ளி மாணவர்கள் top up gst , குழந்தைகளின் ஐஸ்க்ரீம் gst , அட சீ !
இவர் புரியவில்லை என்று சொல்வது இந்த ஆண்டின் மிக சிறந்த ஜோக் .
வளர்த்து விட்ட umno காரர்கள் யார் என்று இப்போது புரிந்திருக்கும் ,
GST அமலாக்கப்பட்டால் 10% சேவை வரி அகற்றப்பட்டு 6% GST அதாவது பொருள் மற்றும் சேவை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்று சொன்னார்கள். அப்படியானால், விலை ஏன் குறையவில்லை. வீட்டைச் சுற்றி புல் வெட்டுபவனும் விலையைக் கூட்டிவிட்டு GST யைக் காரணம் காட்டுகிறான். அவனைக் குறை சொல்லவும் முடியவில்லை. ஏனென்றால் அவனும் GST எனும் வலையில் சிக்கியுள்ளான். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனம்தான் அதிக அளவில் வரிப்பணம் செலுத்தி வருகிறது. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்தத்தான் வேண்டும். மற்றவர்கள் வரி செலுத்தவில்லை என்பதற்காக இப்படி அஞ்சுக்கும் பத்துக்குமே அவதிப்படும் ஏழை மக்களை GST செலுத்த வைத்து அவதிக்குள்ளாக்குவது நியாயமா? அரசாங்க கஜானா காலியாகிவிட்ட நிலையில் இந்த GST மூலம் அதனை சரிகட்ட நினைக்கிறது. ஆனால், அரசாங்கம் நினைத்ததற்கு மாறாக விலையேற்றம் தலைவிரித்தாடுகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாவம் மஹாதீர்! அவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்.