பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் ஹுடுட்-டை ஆதரிக்காததற்காக பெர்மாத்தாங் பாவ் பாஸ் தொகுதியிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். அச்சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்றாரவர்.
மே 7 நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசாவை ஆதரிக்க பெர்மாத்தாங் பாவ் பாஸ் ஒப்புக்கொண்டிருப்பதால் மன்னிப்பு கேட்பதற்கே அவசியமில்லை என மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அவர் கூறினார்.
“சர்ச்சை தீர்ந்தது. இப்படிப்பட்ட கருத்துவேறுபாடுகள் எப்போதும் இருக்கவே செய்யும்.
“மனிதர்களாகிய நாம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்”, என்றவர் குறிப்பிட்டார்.
வாழ்த்துக்கள் .
பி.கே.ஆருடன் சர்ச்சையே இல்லை என்கிறார் மாட் சாபு. பெர்மாத்தாங் பாவ் வேட்புமனு தாக்கலின் போது பாஸ் ஆதரவாளர்கள் 50 பேருக்கு மேல் நான் பார்க்கவில்லையே! அரசியல் தலைவர்கள் மீது மக்களுக்கு மரியாதை குறைகிறது. லிம் குவான் எங்குடன் ஒரு நாலு சீனர்கள் இருந்தார்கள். லிம் கிட சியாங் தனியே நடந்து வந்தார். சிவராசா, மணிவண்ணனுடன் ஓரிருவர். ராயர், ஜக்டிப் சிங், ராம் கர்பால், ஆகியோர் பக்கத்தில் ஒரு தொண்டனும் இல்லை. சைபுதீன், ரபிசி, இருவரும் வேனின் மீது ஏறி பேசியதால், அதனை சுற்றி ஒரு சிறிய கூட்டம். ராமசாமியை காணவில்லை. அவரது அல்லக்கை சத்தீஷ் ஏதோ இழந்தவரை போல தனியே நடந்து வந்தார். ஐந்து முதல் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அக்கா அசிசா வெல்லும் வாய்ப்பு உண்டு.
SINGAM ,தலைகிழாக பேசுகிறீர்கள் ,நீங்கள் என்ன ,அம்னோவின் அல்லக்கையா ??
ஐயா சிங்கம், நான் பார்த்தவரை பாகத்தான் தலைவர்கள் பெரும் பான்மையோர் மிக மிக சாதரணமாகவே கலந்துக் கொளவார்கள். பெரும் படடாளத்தோடு வருவதில்லை .எடுத்துகாட்டுக்கு எங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகுவை சொல்லலாம் .
அட பாவிகளா….தேர்தல் முடிஞ்சி அடிச்சிகிவிங்கலோ…இதெல்லாம் ஒரு பொலப்பா…
PKR -வுடன் கை கோர்ப்பது மாட் சாபு மட்டுமே. மேலிடத்து ஆதரவு இல்லாமலா பெர்மதாங் பௌ தொகுதியில் உள்ள பாஸ் கட்சியைச் சார்ந்த சுண்டக்கா பையன்களெல்லாம் சட்டம் பேசுது!. மக்கள் கூட்டணி பாஸ் கட்சியை கை கழுவி விட்டு வேறு அணுகுமுறையை நாடுவது நல்லது.
தம்பி MOHAN mohan ! உங்களுக்கு அரசியல் கருத்துக்களை கூறும் பக்குவம் போதாது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு தந்தை தன் மகனை அடிக்கிறார் என்றால், அவனை கொல்வதற்காக அல்ல, அவன் திருந்தி நல்லவனாக வரவேண்டும் என்பதற்காக. அவ்வகையில் பக்காத்தான் கட்சியினரை நான் விமர்சிப்பதும் அதுபோலத்தான். அம்னோவை எதிர்த்து பெர்மாத்தாங் பாவில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வந்து பி.கே. ஆர் வெற்றி பெற சிறிது உதவி செய்யுங்களேன். வழிச் செலவுக்கு கொஞ்சம் சில்லறை தருகிறேன்.
மிஸ்டர் MU.TA.NEE! நீங்கள் சொல்வது சரி. சார்ல்ஸ் பண்பானவர். அவரை அறிவேன். பக்காத்தான் ஒரு எழுச்சுமிக்க கூட்டணியாக, மாற்று அரசமைக்கும் தகுதி பெற வேண்டும் என்பதே என் அவா. அவ்வகையில் அதை சுத்தப்படுத்தவும், ஒரு சில கழிசடைகளை கழட்டிவிடுவதில் தவறல்லவே! தகுதியற்ற ஒரு சிலரை விமர்சிப்பதில் நான் பின் வாங்கமாட்டேன்.