பெர்மாத்தாங் பாவ் வாக்களிப்பு நாளான மே 7-ஐ மாநில பொது விடுமுறை நாளாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார்.
அது மாநில ஆட்சிக்குழுவின் முடிவு என்றும் பெர்மாத்தாங் பாவில் வாக்களிப்பு சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.
“முதலாளிமார் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தனியார் துறையில் உள்ளவர்கள், பொது விடுமுறையை அவர்கள் கடைப்பிடிக்காவிட்டாலும் பணியாளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
பெர்மாத்தாங் பாவின் 70,000 வாக்காளர்களில் குறைந்தது 6,000 பேர் வெளியூர்களில் வசிக்கிறார்கள் என்று தெரிவித்த லிம், அவர்கள் வாக்களிக்க திரும்பி வர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
முதலமைச்சருக்கு நன்றி!. கிளந்தானின் செம்பாக்கா இடைத்தேர்தலுக்கு அவ்வரசாங்கம் விடுமுறை கொடுத்தது. அதேபோன்று பினாங்கும் செய்தது. பகாங்கின் ‘நாக்கு வெட்டி’ மந்திரி புசார், ரொம்பின் இடைத்தேர்தலுக்கு [5-5-2015] விடுமுறை கொடுப்பாரா?
கொடுப்பார்……..சி எம் வாழ்க வெற்றி நிச்சயம்