பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகினால் அவரது இடத்துக்கு முகைதின் யாசின் பொருத்தமான தேர்வாக இருக்க மாட்டார் என நினைக்கிறார் ஜைட் இப்ராகிம்.
நடப்பு துணைப் பிரதமர் நாட்டைச் சீர்படுத்துவார் என்றோ கடந்த சில ஆண்டுகளில் நஜிப்பால் நாட்டுக்கு நேர்ந்த தீங்குகளைக் கலைவார் என்றோ முன்னாள் சட்ட அமைச்சரான ஜைட் நம்பவில்லை.
“அவர் 1எம்டிபி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து முழு விவரங்களையும் அம்பலப்படுத்தி. தவறு செய்தவர்களை அவர்கள் யாராக இருப்பினும் தண்டிப்பாரா? அது நடக்கும் என எனக்குத் தோன்றவில்லை”, என்றாரவர்.
அம்னோவுக்கு இப்போதிருப்பதைவிட சிறந்த தலைமைத்துவத்தை வழங்கவும் அரசாங்க அமைப்புகளில் ஊழலை ஒழித்து தரத்தை மேம்படுத்தவும் பொருத்தமான ஒருவர் தெங்கு ரசாலி மட்டுமே என்று ஜைட் தம் வலைப்பதிவில் கூறியுள்ளார்.
துங்கு ரசாலி மட்டுமல்ல, துன் மூஸா ஹித்தாமும் நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் என்பது எனது அபிப்பிராயம். இவர்கள் ஊழலற்றவர்கள் என்பதால், நாட்டை ஆளும் பொறுப்பை கொள்ளைக்கார அம்நோவினர் இவர்களிடம் ஒப்படைக்கமாட்டார்கள்.
துங்கு ரசாலி மட்டுமல்ல, துன் மூஸா ஹித்தாமும் நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் என்பது எனது அபிப்பிராயம். இவர்கள் ஊழலற்றவர்கள் என்பதால், நாட்டை ஆளும் பொறுப்பை கொள்ளைக்கார அம்நோவினர் இவர்களிடம் ஒப்படைக்கமாட்டார்கள்.
இதுதான் உண்மை நம் நாடு அழிவில் இருந்து காக்கப்படும் .
நான் அமோகமாக ஆதரிக்கிறேன்
ஆமாம் உண்மைதான் நானும் ஆதரிக்கிறேன் .
ஆனால் பாருங்க மகதிர் எப்பொழுதுமே தமக்கு சம அறிவு கொண்ட தலைவர்களையோ அல்லது தம்மை விட அதிக அறிவும் திறமையும் கொண்டவர்களை ஆதரித்ததே கிடையாது. கிழவனுக்கு நாட்டில் மேல் அக்கறை இல்லை. வரும் தலைவன் இவன் சொல்லுவதற்கு மண்டையை ஆட்டவேண்டும். நாடு எதிர்கட்சியிடம் போகக் குடாது, காரணம் இவனும் உள்ளே போக நேரிடும். இங்குதான் மக்கள் யோசிக்க வேண்டும். பி என் மலேசியா அல்ல மலேசியா பி என் அல்ல.