அசிசா குடும்பத் தலைவியாக இருக்கத்தான் இலாயக்கு என்று சொல்லவில்லை: சியு மறுப்பு

chewபெர்மாத்தாங் பாவ் பினாங்கு  மசீச தலைவர் சியு  மெய்  பன், பிகேஆர்  வேட்பாளர்  டாக்டர் வான் அசிசா  வான்  இஸ்மாயிலை ஒரு  குடும்பத்தலைவி  என்று  சொல்லப்போக  அது  மசீச, பக்கத்தான்  தலைவர்களுக்கிடையில்  ஒரு  சர்ச்சையாக  உருவெடுத்துள்ளது.

குடும்பத்துக்கு,  அதுவும்  குறிப்பாக  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட அவரின்  கணவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  முன்னுரிமை  கொடுத்து  செயல்படும்  அசிசாவால்  ஒரு  எம்பியாக  செயல்பட  முடியுமா  என்று  செனட்டரான  சியு கூறியதாகவும்  அதற்காக  அவர்  எல்லா  இல்லத்தரசிகளிடமும்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்றும் பக்கத்தான்  தலைவர்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ஆனால், சியு  தாம்  அசிசாவை “குடும்பத்தலைவி”  என்று  வருணித்ததில்லை என்றார். பிகேஆர்  தலைவர்  தொகுதி  மக்களின்  நலனைவிட  பெரும்பாலும்  குடும்ப நலனுக்கே  முக்கியத்துவம் கொடுப்பதுபோல்  தெரிவதால் “மக்களுக்கு  அலுத்துப்  போய்விட்டது” என்று  மட்டுமே  அவர்  கூறினாராம்.