பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும் அதன் செயலக உறுப்பினர் மந்திப் சிங்கும் மார்ச் 28-இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டனர்.
வாக்குமூலப் பதிவுக்காக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அவர்கள் காலை 11 மணிக்கு அங்கு சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
பேரணி தொடர்பில் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் போலீஸ் அவர்களை விடுவித்தது.
முன்னதாக, சின்னின் வழக்குரைஞர் ஹனி தான், சட்டவிரோத பேரணி பற்றிய குற்றவியல் சட்டத்தின் பகுதி 143-இன்கீழ் சின் கைது செய்யப்பட்டிருப்பதாக டிவிட்டரில் கூறி இருந்தார்.
போலீஸ் நடவடிக்கையை மக்களை அச்சுறுத்தும் முயற்சி என கித்தா லவான் ஓர் அறிக்கையில் கூறியது.
“வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கித்தா லவான் பேரணியில் பங்கேற்போரை அச்சுறுத்தும் முயற்சிதான் அது”, என்று அது கூறிற்று.