1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), தேவையான தகவல்களைத் தெரிவித்து கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நிறுவனம் பற்றிய கவலைகளைப் போக்க வேண்டும் என்று சிஐஎம்பி தலைவர் நாசிர் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டார்.
“அதற்கு என்னிடம் தீர்வு இல்லை. ஆனால், எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னால் மக்களுக்குத் தெளிவு ஏற்படும். அது அவர்களின் கவலையைப் போக்கும்.
“எல்லாரும் அதைப் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களின் கவலையைப் போக்க வேண்டும். கவலைகளுக்கு முடிவு கட்டுங்கள். அவ்வளவுதான்”, என கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் நாசிர் கூறினார்.
1எம்டிபி-இன் தொல்லைகளுக்குத் தீர்வு உண்டா என்று வினவப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மக்களுக்கு 500 வெள்ளி BRIM கோடுதால் மறந்து விடுவார்கள்
இது போல சின்ன விஷயத்தையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது என்று எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்! அதனால் பெரிது படுத்த வேண்டாம்!
பொறு, பொறு!. GST – யை எதிர்த்து வருகின்ற 1-ம் திகதி மிகப் பெரிய பேரணி தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஒருக்கால் இதுவே இந்த அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்கும் நிகழ்வாக அமையும்.