போலீஸ்:ஐஜிபி-இன் சகோதரர் சட்டத்தை மீறவில்லை

lawபோலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி) காலிட்  அபு  பக்காரின்  சகோதரர்  அப்துல்லா  அபு  பக்கார்,  ஏப்ரல் 19-இல், பெட்டாலிங்  ஜெயாவில்  ஒரு  பள்ளிவாசலுக்கு வெளியில்  நடந்த  ஆர்ப்பாட்டத்தில்  கலந்து  கொண்டது உண்மை. ஆனால், அவர்  எந்தச்  சட்டத்தையும்  மீறவில்லை.

போலீசின்  தொடக்க  விசாரணைகளில்  இது  தெரிய  வந்துள்ளதாக பெட்டாலிங்  ஜெயா  மாவட்ட  போலீஸ்  தலைவர்  அஸ்மி  அபு  காசிமை  மேற்கோள்காட்டி  சின்  சியு டெய்லி  அறிவித்துள்ளது.

“இதுவரை நடந்துள்ள  விசாரணைகளின்  அடிப்படையில்  பார்க்கையில் அப்துல்லா  சட்டத்தை  மீறவில்லை”, என  அஸ்மி  கூறினார்.

போலீஸ்  விசாரணை  அறிக்கை  இன்று  முழுமைபெறும்  என்றும்  அவர்  தெரிவித்தார்.