பிகேஆர்: அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டாமென்று நஜிப்பிடம் கூற முடியுமா?

sai1பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அடிக்கடி  வெளிநாடுகளுக்குச்  செல்கிறாரே  அதைக்  கண்டிக்க  முடியுமா  என்று  பிகேஆர்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினுக்குச்  சவால்  விடுத்துள்ளது.

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினராகவும்  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாகவும் இருந்து  சரியான  முறையில்  பணியாற்ற  முடியாது, அதற்கு  நேரம் போதாது  என்று  முகைதின்  கூறியதற்கு பிகேஆர்  தேர்தல்  இயக்குனர்  சைபுடின்  நசுத்தியோன்  இவ்வாறு  பதிலடி  கொடுத்துள்ளார்.

“நிதி  அமைச்சராகவும் பெக்கான்  எம்பியாகவும்  பிரதமராகவும் 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன  ஆலோசகராகவும் உள்ள  நஜிப் அதிக  காலத்தை  வெளிநாடுகளில்  செலவிடுவதைக்  கண்டிக்கும்  துணிச்சல்  முகைதினுக்கு வேண்டும்.

“இவை  தவிர ஒவ்வொரு  நாளும்  (முன்னாள்  பிரதமர்) டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின் தாக்குதலையும்  அவர்  எதிர்நோக்க  வேண்டியுள்ளது”, என  சைபுடின்  பெர்மாத்தாங்  பாவில்  கூறினார்.

“அதனால், முகைதின்  வான் அசிசாவை விட்டு  நஜிப்பைப்  பற்றிக்  கவலைப்படுவது  நல்லது”, என்றாரவர்.