பொருள், சேவை பற்றிக் கருத்துரைக்கக் கூடாது என்று அம்னோ தலைமைத்துவம் தமக்குக் கட்டளை இடவில்லை என்பதை நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் உறுதிப்படுத்தினார்.
அது பற்றிப் பேசக்கூடாது என்று தடையுத்தரவு போடப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ரோ அவானியில் கூறப்பட்டது பற்றி வினவியதற்கு அஹ்மட் இவ்வாறு கூறினார்.
அப்படியானால் ஜிஎஸ்டி பற்றி அவர் தொடர்ந்து பேசுவாரா என்று கேட்டதற்கு, தாம் அப்படிச் செய்யாவிட்டால் எதிரணியினர் “வெற்றி” பெற்று விடுவார்கள் என்றாரவர்.
ஜிஎஸ்டி பற்றி எல்லா விவரங்களையும் அறிந்து வைத்திருப்பதாகவும் அதனாலேயே 2013-இலிருந்து அது பற்றிப் பேசும் அரசாங்கப் பேச்சாளராக இருப்பதாகவும் அஹ்மட் கூறினார்.
நீ பேசு. தொடர்ந்து பேசு.. ஒவ்வொரு முறையும் எதிர்ப்பே அதிகரிக்கும். GST வரி வசூலிப்பு திட்டத்தை முறையாக திட்டமிட்டு, அமல்படுத்தத் தவறிய அரசாங்கத்தின் வண்டவாளம் இன்னும் மக்களுக்கு நன்றாக தெரியவரும். அரசாங்கம் கொண்டுள்ள 1MDB, SRC போன்ற பெரிய கடன் தொல்லையிலிருந்து சமாளிக்க அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினால் விலையேற்றமே காண முடிகிறது. அவதியுறுவதோ பாமர ஏழை மக்கள்.!!! விற்பனை மற்றும் சேவை வரி (SST) எப்படி அகற்றப்பட்டது என்பதனை மக்கள் அறியவோ உணரவோ வாய்ப்பில்லை. அதற்கான விளக்கமும் இல்லை. GST வரியினால் விலையேற்றமே உணர முடிகிறது…அமலாக்கத்தின் தோல்வியினை மறைக்க வணிகர்கள் மீது பழி…அமலாக்கம் மக்கள் கையிலா அல்லது அமலாக்க அதிகாரிகள் கையிலா?? பொறுப்பேற்க வேண்டிய அமைச்சோ, அமைச்சரோ அல்லது அமைச்சரவையோ மடத்தனமான அறிக்கைகளை விட்டு மக்களை திசை திருப்ப முயல்கிறது என்பதே தெளிவாகத் தெரிகிறது…
GST யை பற்றி ஒரு விளக்கம் தேவை. ஒரு பொருளின் விலைக்கு நாம் GST செலுத்தவேண்டும் இது சட்டம். ஆனால் பயனீட்டாளர்கள் ஒரு வணிகரின் லாபத்திற்கும் சேர்த்து GST கொடுக்கவேண்டியிருக்கிறதே. உ -ம் உற்பத்தியாளர் தனது பொருளுக்கு ஒரு விலையை நிர்ணயித்து (அவருடைய இலாபம் உற்பட) 6% GST யும் சேர்த்து வாங்குகிறார். அதே பொருள் பல இடை தரகர்களை கடந்து பயநீட்டாலகளை கடந்து வந்து சேரும்போது அத்தனை இடை தரகர்களின் இலபத்திர்க்கும் சேர்த்தே 6% GST செலுத்துகிறார். பொருள் சேவை வரி ஒருபுறம் இருக்க வணிகர்களின் இலாபத்திற்கு பயனீட்டாளர்கள் GST செலுத்துவது எப்படி ஞாயமாகும்? அதனை தவிர்ப்பது எப்படி? GST க்கு முன் ஒரு குறிப்பிட்ட ரொட்டியின் விலை அதனின் மேல் விலை எழுதப்பட்டிருக்கும். அப்படி எழுதப்பட்டிருந்தும் ஒரு சில பெரிய மற்றும் நடுத்தர அங்காடிகளில் அந்த விலையை விட குறைத்தே கொடுப்பார்கள். சில்லரி கடைகளில் அந்த விலையே கொடுக்கவேண்டியிருந்தது. ஆக பெரிய அல்லது நடுத்தர அங்காடிகளை விட சில்லறை வணிகர்கள் அந்த ரொட்டியின் விற்பனையிலிருந்து அதிகம் இலாபம் பெற்றனர். இந்த உதாரணத்தில் நாம் GST கொடுத்திருந்தால் சில்லறை வணிகரிடம் வாங்கிய அதே ரொட்டிக்கு அதிகமான பணத்தை GST யாக கொடுத்திருக்க வேண்டும். அதுபோலவே மற்ற பொருள்களும். மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாமா? இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.