அரசு ஒடுக்குமுறையால் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்தது

freeகுறைகூறுவோர்மீது  போலீஸ்  அடக்குமுறைகள்  அதிகரித்ததால்   பத்திரிகைச்  சுதந்திர  தரவரிசையில்  மலேசியா 142-வது  இடத்துக்கு  இறக்கம்  கண்டுள்ளது.

அமெரிக்காவைத்  தளமாகக்  கொண்ட பிரிடம்  ஹவுஸ்  வெளியிட்டுள்ள  2014 பத்திரிகைச்  சுதந்திரம்  மீதான  அறிக்கையில் பாகிஸ்தான், துருக்கி  ஆகிய  நாடுகள்  பெற்றுள்ள  இடமே  மலேசியாவுக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த  பத்தாண்டுகளில்  உலக முழுவதுமே  பத்திரிகைச்  சுதந்திரம் தரம்தாழ்ந்து  போயிருப்பதாக  பிரிடம்  ஹவுஸ்  கூறிற்று.

“2014இல் ஊடக  நிலவரம்  மிகவும்  மோசமடைந்தது. செய்திகளையும்  தகவல்களையும்  பரிமாறிக்  கொள்வதில்   உலகச்  செய்தியாளர்கள் அதிகமதிகமான  கட்டுப்பாடுகளை  எதிர்நோக்கினர். அவர்களின்  உயிருக்கும்  மிரட்டல்  விடுக்கப்பட்டது.

“அரசாங்கங்கள், கைது  நடவடிக்கை, தணிக்கைமுறை  போன்ற தந்திரங்களைக்  கையாண்டு குறைகூறல்களை  அடக்கப்  பார்க்கின்றன”,  என  அவ்வறிக்கை  கூறியது.